Header Ads



கண்டி பள்ளிவாசல் விவகாரத்தில், நாம் பௌத்த தேரர்களுக்கு அடிபணியவில்லை - ஹலீம்

-விடிவெள்ளி  ARA.Fareel -

கண்டி லைன் பள்­ளி­வா­சலின் நிர்­மாணப் பணி­க­ளுக்கு எதிர்ப்புத் தெரி­வித்து சிலர் மேற்­கொண்ட ஆர்ப்­பாட்­டத்­தை­ய­டுத்து நான் மகாநாயக்க தேரர்­களை சந்­தித்­தமை சிலரால் தவ­றாக புரி­யப்­பட்­டுள்­ளது.

நாம் மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் சென்று அவர்கள் சொன்­னதை மாத்­திரம் செவி­ம­டுத்து வந்­த­தாக தப்­பான அபிப்­பி­ரா­யங்கள்  தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளன.

தேரர்­க­ளுக்கு நாம் அடி­ப­ணி­ய­வில்லை. எமது நிய­ாய­மான கோரிக்­கை­க­ளையே அவர்­க­ளி­டத்தில் முன்­வைத்தோம் என முஸ்லிம் சமய விவ­கார, தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

கண்டி லைன் பள்­ளி­வா­சலின் நிர்­மாணப் பணிகள் தற்­கா­லி­க­மா­கவே நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. நோன்பு முடி­வுற்­றதன் பின்பு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுடன் இது பற்றி கலந்­து­ரை­யாடி தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்த மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­தித்து நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வது சிறி­யவோர் மினாரா என்றும் மிகவும் தாழ்­வா­கவே அமை­யு­மென்றும் விளக்­கி­யி­ருக்­கிறேன் என்றும் அவர் விடிவெள்ளிக்கு தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்;  ‘கண்டி லைன் பள்­ளி­வாசல் தலதா மாளி­கையை விடவும் மிகவும் தாழ்ந்த பிர­தே­சத்­தி­லேயே அமைந்­துள்­ளது.

கண்­டிக்கு வருகை தரும் வெளி­நாட்­ட­வர்கள் அந்தப் பள்­ளி­வா­சலை அடை­யாளம் காண முடி­யா­தி­ருக்­கி­றது. இதனை எதிர்ப்­ப­வர்கள் மினாரா தலதா மாளி­கையை விடவும் உய­ர­மாக அமையும் என தவ­றாக அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

முஸ்­லிம்கள் பெரும்­பான்மை இனத்­த­வ­ருடன் சமா­தா­ன­மா­கவே வாழு­ப­வர்கள். கண்டி நகரில் இன நல்­லு­ற­வுக்கு குந்­தகம்  விளை­விக்க திட்­ட­மிட்­டுள்­ள­வர்­களே இதற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கி­றார்கள் என்­ப­தையும் மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறேன்.

எமது உரி­மை­களை நான் ஒரு­போதும் அவர்­க­ளிடம் விட்டுக் கொடுக்­க­வில்லை. நோன்பு காலத்தில் முஸ்­லிம்கள் பிரச்­சி­னை­க­ளுக்­குள்­ளாகிக் கொள்­ளக்­கூ­டாது என்­ப­தற்­காக பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தீர்­மா­னத்­துக்­க­மைய மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­தித்து எமது நிலைப்­பாட்­டினை விளக்­கினேன்.

மகா­நா­யக்க தேரர்­க­ளு­ட­னி­ருந்த தேரர் ஒருவர் பங்­கர கம்­மன முஸ்லிம் கிரா­மத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளை­ஞர்கள் பௌத்த கொடி­யினைத்  தீயிட்டு எரித்த விட­யத்தை கவ­லை­யுடன் தெரி­வித்தார்.

மட­வளை மதீனா கல்­லூ­ரியில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தையும் கூறினார். இவ்­வா­றான செயல்கள் பெரும்­பான்மை இன மக்­களை கவலை கொள்ளச் செய்­துள்­ள­தா­கவும் இவ்­வா­றான நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மான சம்­ப­வங்கள் இடம்­பெ­றக்­கூ­டாது எனத் தெரி­வித்தார்.

சிலர் நாம் மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­தித்து இவ்­வா­றான செயல்கள் பெரும்­பான்மை இன மக்­களை  கவலை கொள்ளச் செய்­துள்­ள­தா­கவும் இவ்வாறான நல்லிணக்கத்துக்கு பாதகமான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனத் தெரிவித்தார்.

சிலர் நாம் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து பிரச்சினையை விளக்கியமையைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றார்.

2 comments:

  1. When you go to see maha nayaka next time, don't forget to take half bottle of coconut oil to apply on your b__k.

    ReplyDelete
  2. YOU MR. HALEEM,
    ALL WORLD SAW YOU BOWED DOWN TO THAT MONK LIKE DOING ' RUK UH' IN MUSLIM'S PRAYER.......you were DUMB in front of that BIKKUS
    . ARE YOU A BRAVE MUSLIM ?
    WHY DID YOU BOW DOWN TO THAT RACIST MONK ?
    YOU ARE NOT A PROPER MAN TO A FORTFOLIO OF MUSLIM CULTURE ...
    YOU FIRST MAKE THAWBA THEN SPEAK AS A MUSLIM

    ReplyDelete

Powered by Blogger.