பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை சவூதி நிறுத்த வேண்டும் - ஹிலாரி
சவூதி அரேபியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராகவிருக்கும் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை சவூதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகள் இனியாவது நிறுத்த வேண்டும்.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இளம் சிறுவர்களின் மனங்களில் மதவெறியை விதைக்கும் மதரஸாக்களுக்கும், மசூதிகளுக்கும் நிதியுதவி அளிப்பதையும் அந்த நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஆர்லண்டோவில் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதி போலீஸாரால் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் அவரது மனதில் விதைக்கப்பட்ட நச்சுக் கிருமி இன்னும் உயிரோடு இருக்கிறது என்றார் அவர்.
சவூதி அரேபியா, கத்தார், குவைத் ஆகியவை அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைதான் மேற்கூரிய நாடுகள் உலகப்பயங்கரவாதியான அமெரிக்காவுக்கு உதவியளிப்பதை ( ஆயுதக் கொள்வனவு, பண்புகளையும் கண்ணையன் வழங்கள், அமெரிக்க கொள்கைகளுக்கு ஆதரவளித்தல்......) நிறுத்த வேண்டும்.
ReplyDeleteதொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் பழக்கம் அமெரிக்காவுக்குத்தான் உண்டு. இன்று பல நாடுகளில் குழப்பத்துக்கு அமெரிக்காவும் ஒரு காரணம்.
ReplyDeleteஉலகிலுள்ள அனைத்துப் பயங்கரவாதிகளுக்கும் பணம் கொடுக்கும் நாய் இப்படிப் பேசுவது வேடிக்கை.
ReplyDeleteComment அனுப்பும்போது மனிதர்களுக்கு மிருகங்களின் பெயரைச் சொல்வது நாகரீகமல்ல. எனவே இதனைத் தவிர்ப்போம்.
ReplyDelete