Header Ads



IS தீவிரவாத இயக்க தலைவன் பலி - துருக்கி பத்திரிகை

ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் அபுபக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினருக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு சிரியாவில் உள்ள ராக்கா என்ற இடத்தில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது அமெரிக்க படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் அல் பக்தாதி காயம் அடைந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக துருக்கியில் வெளியாகும் அரசு சார்பு பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அல் பக்தாதி இறந்துவிட்டதை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான ஆதரவான அல் அமாங் செய்தி நிறுவனம் உறுதிபடுத்தி இருப்பதாகவும் அதிலவ் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அல் பக்தாதி கொல்லப்பட்டு விட்டதாக தாக்குதல் நடத்திய அமெரிக்க கூட்டுபடைகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.