Header Ads



ஈரானிடம் நிதி இருக்கும் வரை, ஹிஸ்புல்லாவுக்கு நிதிச் சுமை என்பதே கிடையாது - ஹஸன்

"எங்களுக்கு ஈரானிடமிருந்து நேரடியாக நிதி கிடைப்பதால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை' என்று ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து அதன் தலைவர் ஹஸன் நஸ்ரல்லா, அந்த அமைப்புக்கு சொந்தமான அல்-மனார் தொலைக்காட்சியில் -24- வெள்ளிக்கிழமை கூறியதாவது:

 எங்களுடன் வர்த்தகத் தொடர்புடைய வங்கிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நாங்கள் வங்கிகள் மூலம் எங்களது நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில்லை. உண்பது, உடுத்துவது முதல் ஆயுதங்கள், ஏவுகணைகள் வரையிலான ஹிஸ்புல்லா அமைப்பின் அனைத்து செலவுகளையும் ஈரான் கவனித்துக் கொள்கிறது.

 ஈரானிடம் நிதி இருக்கும் வரை ஹிஸ்புல்லாவுக்கு நிதிச் சுமை என்பதே கிடையாது. நாங்கள் தொடர்ந்து ஈரானிடமிருந்து ஏவுகணைகளைப் பெற்று, இஸ்ரேலை மிரட்டிக் கொண்டுதான் இருப்போம். எந்தப் பொருளாதாரத் தடையாலும் எங்களை எதுவும் செய்துவிட முடியாது என்றார் அவர்.

 லெபனானை கடந்த 1982-ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அப்போது, இஸ்ரேல் ஆதரவுப் படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக, ஈரானின் ஆதரவுடன் ஷியா பிரிவினரைக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கொரில்லாப் போரில் இஸ்ரேல் ஆதரவுப் படையை ஹிஸ்புல்லா தோற்கடித்தது.

 தற்போது லெபனான் ராணுவத்துக்கு இணையாகத் திகழும் ஹிஸ்புல்லா படை, சிரியா உள்ளிட்ட நாடுகளில் சண்டையிட்டு வருகிறது.

 அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும், அரபு லீக் அமைப்பும் ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. அமெரிக்க நிலைகள் மீது நிகழ்த்தப்பட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாவுடன் வர்த்தகத் தொடர்புடைய வங்கிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது.

2 comments:

  1. Biggest lies of the year America supporting you and your mother Iran and your father Israel may alla destroy you soon

    ReplyDelete
  2. we know you are in the border of SHEA

    ReplyDelete

Powered by Blogger.