மதீனா முனவ்வராவில், மன்னர் சல்மான்
-Ash-Sheikh TM Mufaris Rashadi-
ரமலானில் சிறப்பு வாய்ந்த இறுதி பத்து தினங்களில் ஹரமைனில் இபாதத்தை நிறைவேற்றுவதற்காக மதீனா முனவ்வரா நகருக்கு மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அவர்கள் வருகை புரிந்துள்ளார்.
மஸ்ஜிதுந் நபவிக்கு வருகை தந்த மன்னர் அஷ்ஷெய்கு சல்மான் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரவ்ழாவில் நின்று பணிவாக ஸலாமை எத்திவைத்து விட்டு சில மணித்துளிகள் முனாஜாத் செய்தார்கள்.
பின்னர் ரவ்ழதுல் ஜன்னாவில் தொழுகையை நிறைவேற்றினார்கள். அவர்களுடன் கண்ணியமான இமாம்கள் அஷ்ஷெய்கு அப்துல் ரஹ்மான் ஸுதைஸி அஷ்ஷெய்கு ஹுதைபி மற்றும் அஷ்ஷெய்கு அல் முஅன்னா. அஷ்ஷெய்கு ஸலாஹுல் பத்ரு حفظهم الله ஆகியோர் இருந்தார்கள். மதீனா முனவ்வரா நகரின் மேம்பாட்டு திட்டத்துக்கான வரைவுகளை காணொளி மூலம் துவக்கி வைத்தார்கள்.





ஷேக் அவர்களே நபியவர்கள் மீது சலாம் சொன்ன பின் தான் இரண்டு ரகாத் தொளுததாக சொல்கின்றீர்களே இதனை உங்களால் உறுதிப் படுத்த முடியுமா? தொழுத பின் நபியவர்களின் அடக்கஸ் தளத்திற்கு சென்று சலாம் சொல்வதே சஹாபாக்கள், நல்லறிஞ்சர்களின் வழியாகும். எனவே மக்களை தயவு செய்து பிழையாக வழிநடத்த வேண்டாம்.
ReplyDeletepudiy pattam eppo kidaithathu
ReplyDeleteExtream nothing happend abu darwesh.your perfect????
ReplyDelete