Header Ads



சார்ஜாவில் இப்படியும் ஒரு வசதி


குப்பையும் கோபுரமாகும் என்பார்கள் தற்போது குப்பை தொட்டியையும் மக்களுக்கு உதவும் கோபுரமாக்க முடியும் என சார்ஜாவில் ஸ்மார்ட் குப்பை தொட்டியை அறிமுகபடுத்தியுள்ளார்கள். ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒரு பகுதியான சார்ஜா மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியை பீயா என்னும் அரசு சார்பு நிறுவனம் செய்து வருகிறது. குப்பைகளை அகற்றுவதில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்றவாறு பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முதல் முறையாக ஷார்ஜாவில் ஸ்மார் குப்பை தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குப்பை தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள‌ சோலார் தகடுகள் மூல‌சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் அதிலிருந்து வை பை எனும் இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இலவசமாக வை பை வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த தொட்டியில் குப்பைகள் நிறைந்தவுடன் தானியங்கி கருவி மூலம் பீயா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று விடும் இதன் மூலம் குப்பைகள் அகற்றும் பணி எளிதாகும்.

இது படி படியாக பல்வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. ஸ்மார்ட் குப்பை தொட்டிக்கள் சார்ஜா கடற்கரை பகுதியில் நிறுவபட்டுள்ளது. இதனை பீயா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் காலித் அல் ஹுரைமி தொடங்கி வைத்தார்.

No comments

Powered by Blogger.