Header Ads



கொஸ்கம - சாலாவ பகுதிக்கு, யாரும் புதினம் பார்க்க வரவேண்டாம் - பொலிஸார்


கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தின் காரணமாக 47 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த முகாம் தற்போது வரை புகைந்தவாறு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஹைலவல் வீதி, களுஅக்கல சந்தியில் மூடப்பட்டுள்ளதோடு, குறித்த வீதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடித்துச் சிதறிய ஆயுதங்களின் பகுதிகள் அங்குமிங்கும் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

குறித்த விபத்தின் காரணமாக கொஸ்கம வைத்தியசாலைக்கும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் ஜே.பி. சுபசிங்க தெரிவித்தார்.

குறித்த சேதத்தை சரிசெய்ய, சுமார் 6 மாத காலம் வரை செல்லும் என அவர் தெரிவித்தார்.

குறித்த பகுதியின் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரையான பகுதிக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

வெடிக்காத மற்றும் வெடிக்கும் நிலையில் உள்ள ஆயுதங்கள் வெடிக்கலாம் எனும் அச்சம் காரணமாக குறித்த பிரதேசத்திற்குள் யாரும் வர வேண்டாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பிரதேசத்தின் நிலைமை குறித்து அறிவதற்காக பொதுமக்கள் சேர்கின்றமையால் அப்பகுதியில் அதிக வாகன நெரிசல் மற்றும் பாதுகாப்புக் கடமைகளுக்கும் இடைஞ்சல் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தேவையின்றி அப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.