சிங்கள தேசிய வாதத்தின் மீள் எழுச்சி தொடர்பில், முஸ்லிம்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முஸ்லிம்கள் தமது மார்க்கக் கடமைகளை அடுத்த சமூகத்துக்கு அச்சுறுத்தல் - தொந்தரவு ஏற்படாத வகையில் அமைதியாகவும் - கண்ணியமாகவும் மேற்கொள்ளுமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படும் ரமழானில் நன்மைகளை அடைந்து கொள்வதற்காக மார்க்க விடயங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றோம். தராவீஹ், கியாமுல் லைல் உள்ளிட்ட இரவு வனக்கங்களிலும் அதிகம் ஈடுபடுகின்றோம். இவ்வாறான சந்தர்பங்களில் அடுத்த சமூத்தினருக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்துக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பிறமதத்தவர்களுடன் ஒன்றாக கலந்தே வாழ்கின்றனர். கடந்த நோன்புகளிலும் இப்பகுதிகளில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இவ்வாறான அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாத வகையில் இளைஞர்கள் சரியான விதத்தில் வழிநடத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை பள்ளிவாசல் நிர்வாகம், பொது அமைப்புக்கள் மற்றும் இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஏதாவது சிறு பிரச்சினை ஏற்படும் வரை காத்துக் கொண்டுள்ள சிங்கள தேசிய வாத அமைப்புக்கள் பிரச்சினையை பெரிதுபடுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சிங்கள தேசிய வாதத்தின் மீள் எழுச்சி தொடர்பில் முஸ்லிம்கள் நிதானமாக – கவனமாக நடந்து கொள்ள வேண்டும். – எனத்தெரிவித்தார்.

மாஸா அழ்ழாஹ் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விடயம்.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் முஸ்லிம் பொது மக்கள் நிதானமாக இருப்பார்கள், உங்களைபோல் அரசியல் வாதிகள் நிதானம் தவறாமல் இருந்தால் சரி....
ReplyDeleteகடந்த கால நிகழ்வுகளை மறக்கவில்லை...
Brother hisbullah,,u r advising the Sri Lankan Muslims now? What you have done? anything behalf of Muslim Community during your Passed period with Rajapaksa while bodhu bala sena demolished the several masjids, halal issue, Beruwala and aluthgama as per kothabaya planned, could u please tell us the exactthe meaning of 'Aayathul Kursi' in our mother tongue??
ReplyDelete