கடற்படையினருக்குப் பாரிய அவமானத்தை, ஏற்படுத்தியது யார்..? உபுல் ஜோசப்
கிழக்கு முதலமைச்சரின் முறையற்ற நடத்தை தொடர்பாக இந்நாட்களில் பாதைகளில் செல்லும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
'முதலமைச்சர் கடற்படை வீரரிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.'
இதுவே நாட்டு மக்களின் பொதுவான கருத்தாக காணப்படுகிறது. கதை உண்மைதான். நாட்டைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்துப் போராடிய இராணுவத்தினர் அரசியல்வாதிகள் முன்னிலையில் அவமானத்துக்கு உட்பட அனுமதிக்கக் கூடாது. கடற்படையினர் அரசியல்வாதிகள் முன்னிலையில் அவமானத்துக்கு உட்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மஹிந்தவின் மகன் யோசித்த கடற்படையில் இணைந்து கடற்படை வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய புலமைப் பரிசில்களை, விருதுகளைத் தனக்கு உரித்தாக்கிக் கொண்ட போது தான் கடற்படைக்குப் பாரிய அவமானம் ஏற்பட்டது. யுத்த பூமியில் ஒரு நாளாவது காலடி எடுத்து வைக்காமலேயே அவர் அவ்வாறு அவற்றை உரித்தாக்கிக் கொண்டார்.
2006 இல் தான் யோசித்த கடற்படையில் இணைந்து கொள்கிறார். யோசித்த கடற்படையில் இணைந்து கொண்டமையை மஹிந்த தான் நாட்டுக்காக, தேசத்துக்காக வேண்டி துணிச்சலுடன் போராடுவதற்காகத் தனது மகனை இராணுவத்துக்கு வழங்கியதாகவே காட்டினார். யோசித்தவின் வெளியேறிச் செல்லும் அணிவகுப்புக்குச் செல்லும் மஹிந்த மகனை யுத்தத்துக்கு அனுப்பிய ஒரே அரசியல் தலைவர் தானே என்று காட்டி அதனை அரசியல் கண்காட்சியாக மாற்றிக் கொண்டார். அப்போது ஊடகங்களும் அதனை வீர காவியமாக சித்தரித்தன.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆந் திகதி கடற்படையில் இணைந்த யோசித்த அதன் பின் சரியாக இரண்டு வாரங்களில், அதாவது 2007 ஜனவரி 01 ஆந் திகதி பிரித்தானிய இளம் அதிகாரிகள் பயிற்சிப் பாடநெறியொன்றுக்குச் செல்கிறார். யோசித்த இராணுவத்தில் இணைந்து 14 நாட்களில் அவருக்குப் பயிற்சிப் பாடநெறியொன்றுக்குச் செல்வதற்கு எவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தது என்று அவரை விட சிரேஷ்ட தரத்தில் இருந்த கடற்படை வீரர்கள் கேள்வியெழுப்பும்போது அவருக்கு விசேட புலமைப் பரிசில் ஒன்று கிடைத்ததாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. எனினும், மஹிந்த தோற்ற பின்பு யோசித்த குறித்து தேடிப் பார்க்க கடற்படைத் தளபதி நியமித்த குழு அறிக்கை மூலம், அவரது பிரித்தானியப் பாடநெறிக்காக கடற்படை அறுபத்தியிரண்டு இலட்சத்து என்பத்தி நான்காயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டது. அவர் பிரித்;;;;;;;;தானியாவில் பாடநெறியை முடித்து விட்டு 2007 டிசம்பர் 07 இல் இலங்கைக்கு வருகிறார். அது வடக்கில் யுத்தம் மும்முரமடைந்து ஆயிரக்கணக்கான தரை, கடல், வான் படையினரின் பிரேதங்கள் சவப்பெட்டிகளில் கொழும்புக்கு வரும் காலமாகும். 2007 டிசம்பர் 07 இலங்கைக்கு வரும் யோசித்த இலங்கையில் 05 மாதங்களான சிறு காலப்பகுதியே இங்கு தங்கியிருந்தார். 2008 மே 15 அவர் மீண்டும் வெளிநாடு செல்வது உப லெப்டினன்ட் தொழிநுட்பப் பாடநெறியைத் தொடர்வதற்காகும். ஒக்டோபர் வரை அவர் வெளிநாட்டில் இருந்து பாடநெறியதை; தொடரந்து விட்டு இலங்கைக்கு வருவது 2008 ஒக்டோபரிலாகும். அவருக்கு கிடைத்த அந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து கடற்படைக்குள் கிசுகிசுக்கள் பரவும்போது அதுவும் அவருக்கு கிடைத்த விசேட புலமைப் பரிசில் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனினும் தற்போதைய அரசாங்கம் நியமித்த குழு அவருடைய அப்பாடநெறிக்காக கடற்படை ஐம்பத்து மூன்று இலட்சத்து முப்பத்தி ஏழாயிரத்து அறுநூறு ரூபாய் எழுபது சதம் செலவழித்துள்ளது என்பதனைக் கண்டு பிடித்தது. 2008 ஒக்டோபரில் இலங்கைக்கு வந்த யோசித்த ஒரு நாளாவது வடக்கு – கிழக்கு யுத்த களத்தில் இருந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. யுத்தம் முடிவடைந்த பின்பு 2009 நவம்பர் 11 மீண்டும் அவர் உக்ரெய்ன் நாட்டுக்கு சிறப்பு ஆய்வு உத்தியோகத்தர் பாடநெறியொன்றைத் தொடர்வதற்காக செல்கிறார். அதற்காகச் செலவழித்துள்ள பணம் முப்பத்தி ஏழு இலட்சத்து எழுபத்தி மூவாயிரத்து எண்ணூறு ரூபாய் எழுபத்தி ஆறு சதமாகும். 2009 மார்ச் 07 ஆந் திகதி மஹிந்த ராஜபக்ஷவினால் திருகோணமலை கடற்படை முகாமில் யோசித்தவுக்கு வருடத்தின் சிறந்த ஆனைளாipஅயn விருது வழங்கி வைக்கப்பட்டது. அவர் கடற்படைக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காகவே அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அவ்வாறே அவருக்கு ளுறழசன ழக ர்ழழெரச விருதும் வழங்கப்பட்டுள்ளது. நாட்டையும், தேசத்தையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்பு செய்த அதிசிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை யோசித்தவுக்கு வழங்க அவரது தாயும் தந்தையும் வருகை தந்தமை உணர்வுபூர்வமான ஒரு நிகழ்வு என்று பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் குறிப்பிடுகிறது. முப்படைத் தளபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவின் அறிவுறுத்தலின்படி யுத்தத்தில் உயிர்த் தியாகஞ் செய்த, அங்கவீனமடைந்த அப்பாவி கிராமியக் கடற்படை வீரர்களைக் ஏளனப்படுத்தும் வகையிலேயே கடற்படை இந்த விருதை யோசித்தவுக்கு வழங்கியது.
அப்போது கடற்படை வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை யோசித்த பறித்துக் கொண்டமை குறித்து இந்த நாட்டின் எந்தவொரு ஊடகமும், தேசப்பற்றுள்ள எவரும் வினா எழுப்பவில்லை. லசந்த விக்ரமதுங்க மாத்திரமே வினா எழுப்பினார். அதே போன்று யுத்;தத்தின்போது புலிகளின் ஆயதங்களைக் கொண்ட படகுகளையும், கடற்புலிகளையும் அழித்த அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொடவை பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளராக நியமித்து வீதிகள் அமைக்கும் பொறுப்பை ஒப்படைக்கும்போது தேசப்பற்றுள்ளவர்கள் என்றும் இராணுவத்தினரின் காவலர்கள் என்றும் காட்டிக் கொள்ளும் ஊடகங்கள் ஒரு வார்த்தை பேசவோ, எழுதவோ இல்லை. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக ஐ.நா. அமைப்பின் அலுவலகம் முன்பாக விமல் வீரவன்ச சத்தியாக்கிரகம் செய்யும்போது அதனைச் சூழ பாதுகாப்பு வழங்கிய பொலிசாரை அகற்றுமாறு விமல் அப்போதைய பாதுகாப்புச் செயலாளரிடம் வேண்டினார். கோட்டாபய உடனடியாக பொலிசாருக்கு அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். பொலிசார் செல்லும்போது விமலின் ஆதரவாளர்கள் பொலிசாரைக் கற்களால் தாக்கினர். பொலிசாரின தொப்பிகளைக் கழற்றி ஏளனப்படுத்தினர். இந்த நாட்டின் ஊடகங்களோ, தேசப்பற்று மிக்கவர்களோ அன்று ஆதரவற்ற நிலைக்குட்பட்ட பொலிசாருக்காக வேண்டி வாய் திறக்கவில்லை. அவ்வாறே யுத்த வீரர் என்று பெயர் பெற்ற பொன்சேக்காவை நாயைப் போன்று இழுத்துக் கொண்டு சென்று சிறையிலிட்டபோது அந்த தேசப்பற்று மிக்கவர்கள் மெதமுலன மேசையிலிருந்து விழும் முட்களை சூப்பிக் கொண்டிருந்தனர். 2010 ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து பொன்சேக்காவோடு ஹோட்டலில் தங்கியிருந்த, யுத்தத்தில் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய இராணுவ அதிகாரிகளை நடுத்;தெருவில், சுட்டெரிக்கும் வெயிலில் முழந்தாளிட வைத்து மக்களுக்கு முன்பாக அவமானப்படுத்தும்போது அந்த தேசப்பற்று மிக்கவர்கள் 'ஜயவேவா' என்று கோசமிட்டனர். மேலும் பொன்சேக்கா அண்மையில் பாராளுமன்றத்திற்கு வந்து உரையாற்றும்போது கூட்டு எதிர்க்கட்சியின் தேசப்பற்றாளர்கள் அவரைப் பேச விடாமல் மிகவும் மோசமான தூசன வார்த்தைகளால் தூற்றினர். அவரை வெலே விதானை என்று கூறி அவமானப்படுத்தினர். மஹிந்தவும், மஹிந்தவாதிகளும் இராணுவத்தினரை அவமானப்படுத்தும்போது அது கெட்டிக்காரத்தனமாகும். அது தேசப்பற்ற மிக்க செயலாகும். இங்கு உள்ள ஒரே பிரச்சினை தேசப்பற்றோ அல்லது இராணுவத்தினர் மீதான அன்போ அல்ல. மாறாக அதிகாரம், சிறப்புரிமைகள் மற்றும் செல்வநிலை என்ப இல்லாமல் போன துயரமாகும்.
உபுல் ஜோசப் பிரநாந்து
நன்றி – மவ்பிம (2016.05.29)
தமிழில் - அபூபத்ஹான், ஹேனேகெதர

GOOD LINES
ReplyDelete