பாராளுமன்றத்தில் சூடான நிலை
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்டமை குறித்து கருத்து தெரிவிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, விசேட கோரிக்கையை முன்வைத்தார்.
அதன்போது, ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவுக்கு உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டது. அவர் உரையாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இந்த நிலையால் நாடாளுமன்றத்தில் சூடான நிலை ஏற்பட்டது.

Post a Comment