ரஞ்சன் ராமநாயக்காவின் செயற்பாடு - ஹரீஸ் ஆத்திரம்
மாதிவெலயில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத்தொகுதியில்இருந்து கண்டுபிடிக்கப்பட்ட டிபென்டர் வாகனமானது தற்போதைய அமைச்சரவையின் கீழ்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரான தானே பாவிப்பதாகவும் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனைத்து ஆவணங்களும் விளையாட்டு அமைச்சில் உள்ளதாகவும், குறித்த வாகனத்தைதனக்கு முதல் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயேபயன்படுத்தியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த வானம் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் பிரதி அமைச்சர்ரஞ்சன் தன்னிடம் விசாரிக்காமல் இவ்வாறு நடந்துகொண்டது கவலையளிப்பதாக அவர்தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் போலி இலக்கத்தகடுடன் குறித்தடிபென்டர் வாகனம் இருப்பதாகவும்,அதனை பயன்படுத்தி மஹிந்தானந்த அளுத்கம நபர்களைதாக்கியதாகவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சரால் 18ம் திகதி பாராளுமன்றத்தில்கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதோடு, அடிதடி வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஞ்சன் ராமநாயக்க இந்த விடயத்தில் தேவையற்ற பிரச்சினைகளைஉருவாக்குவதாக பிரதி அமைச்சர் ஹரிஸ் குறிப்பிட்டுள்ளதுடன், இந்த வாகனமானதுஉத்தியோகபூர்வமாக விளையாட்டு அமைச்சுக்கு சொந்தமானது.
முன்னாள்விளையாட்டுத்துறை அமைச்சர் இதனை எதற்காக பயன்படுத்தினார் என்று எமக்குதெரியாது.
தான் பிரதி அமைச்சராக ஆனவுடன் இந்த வாகனத்தைப்பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ள அவர், தான் இப்போது மாதிவெலகுடியிருப்புத் தொகுதியிலேயே வசிப்பதாகவும்,அங்கு வாகனங்கள்நிறுத்துமிடத்திலேயே இதனையும் நிறுத்தி இருந்ததாகவும், இது தொடர்பில் அங்குள்ளபாதுகாப்பு பொலிஸாருக்கு தெரியும் என்றும் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்கும்போது பிரதி அமைச்சர் ரஞசன் ராமநாயக்க என்னிடமோ,அங்குள்ளபொலிஸாரிடமோ கேட்காமல் அங்கு சென்று கதவுகளை திறந்து சோதனையிட்டுள்ளமை தன்னைமிகவும் பாதிக்கும் சம்பவமாக இருப்பதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரிஸ்தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Just take it easy as Ranjan is trying to highlight crimes.
ReplyDeleteYes, Fazal Zaad is right. It could be his misunderstanding. Take it easy.
ReplyDelete