முஸ்லிம்கள் வெசாக் கூடுகளை எரித்தமை, பௌத்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது - ஞானசார
-விடிவெள்ளி ARA.Fareel-
முஸ்லிம்கள் மஹியங்கனையில் வெசாக் நோன்மதித் தினத்தன்று பௌத்த கொடிகளையும் வெசாக் கூடுகளையும் எரித்துள்ளமை பௌத்தர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.
இவ்வாறான செயல்களே இனங்களுக்கிடையில் விரிசல்களை ஏற்படுத்துகின்றன என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து எதிர்ப்பு வெளியிட்ட இரு சிங்களவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.
மஹியங்கனையில் பௌத்த கொடி எரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியமை, வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தமை ஆகிய குற்றங்களின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர் இருவரின் விடுதலையை வலியுறுத்தி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மஹியங்கனை நகரில் ஓர் எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.
எதிர்ப்புப் பேரணியில் ஞானசார தேரரும் கலந்து கொண்டார்.
இந்த எதிர்ப்புப் பேரணி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், மஹியங்கனையில் பொலிஸார் பக்கசார்பாகவே நடந்து கொள்கின்றனர். பௌத்த கொடி மற்றும் வெசாக் கூடுகள் எரித்தமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தவறானதாகும்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டிருக்கிறோம்.
பல நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும் விடுதலை செய்து மேலதிக சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்க உதவுமாறு பொலிஸ் மா அதிபரை வேண்டியிருக்கிறோம் என்றார்.
கடந்த வெசாக் நோன்மதி தினத்தன்று மஹியங்கனை பன்சலையில் பௌத்த குரு ஒருவர் ஆற்றிய மார்க்க போதனையின்போது முஸ்லிம்கள் பற்றி தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டது என்பதனால் கோபமடைந்த பங்கரகம்மனயைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பௌத்த கொடிகளை எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து மஹியங்கனை பௌத்த குருமாரும் மக்களும் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
இதேவேளை பங்கரகம்மனயைச் சேர்ந்த 8 முஸ்லிம் இளைஞர்கள் சம்பவம் தொடர்பில் பொலிஸில் சரணடைந்ததையடுத்து பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அத்துடன் பௌத்த கொடி எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹியங்கனையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் கடைகள் அடைப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் மேலும் பலரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
பெரும்பான்மை இனத்தவரின் கைதுக்கு எதிராகவே நேற்று முன்தினம் எதிர்ப்பு பேரணி நடாத்தப்பட்டது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பங்கரகம்மன, ரோஹன, தம்பகொல்ல ஆகிய கிராமங்களில் மேலதிக பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை நகரில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு, கடையடைப்பும் நடந்துள்ளது. அந்தப் பின்னணியில், சத்தியாகிரகத்தில் ஈடுபட்டிருந்த தேரர்களுடன் அங்கு வந்த ஞானசார தேரரும் இணைந்து இன ரீதியான காரசாரமான கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து அமைதியின்மை தோன்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போ, பெளத்தர்களின் அளுத்கம அட்டகாசம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?மறைந்திருந்த இந்த பேய் மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளது!
ReplyDeleteivarkaley theervu valanginal neethimanrangal ethatku.Kaaddumirandigal. ivargal orupothum thirunthappovathu illai.Vijajanin valiththonralkal.Vijayan ean nadu kadaththappaddan?sinthiyungal anparkaley.
ReplyDelete