தலதா மாளிகையைவிட, மினாரத்தை உயரமாக கட்டமாட்டோம் - முஸ்லிம்கள் உறுதி
கண்டி லயன் பள்ளியில் அமைக்கப்பட இருந்த 'மினரா' கோபுர கட்டுமானப் பணிகளை தற்காலிக மாக இடைநிறுத்துவதாக முஸ்லிம் சமய விவகார தபால் துறை அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.(5.6.2016)
கண்டி மல்வத்தை மகாநாயக்கத் தேரர் . திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வரகாவே ஸ்ரீ தம்தரத்ன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய பின் அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
ஒரு இனவாதக் குழுவினரின் எதிர்ப்பு காரணமாக கண்டியில் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து கண்டி பன்னிவாயல்கள் சம்மேளனத்தில் தலைவர் சித்தீக், முன்னாள் வக்ப் சபை அங்க்ததவர் மௌலவி பஸ்லுல் றஹ்மான், உற்பட இன்னும் சில முக்கியஸ்தர்களுடன் மேற்படி இரு மகாநாயக்கர்களை யும் சந்தித்து நிலைமையை விளக்கியதாகவும் இது எந்த வகையிலும் ஸ்ரீ தலதா மானிகையை விடஉயர மாட்டாது என்றும் எதிரிலுள்ள சிட்டி சென்றர் கட்டிடத்தின் கூறையை விடவும் தாழ்ந்த உயரத்தில் அது அமையவுள்ளதாகவும் தெரிவித்ததாகவும் கூறினார்.
இருப்பினும் புனித றமலான் பிறந்து விட்டதால் அமல் செய்யும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகைiயில் மேற்படி விடயத்தை தற்காலிகமாக இடை நிறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
எப்படி இருப்பினும் மகாசங்க்ததினரின் வேண்டுகோள்களை குறிப்பாக மகாநாயக்கத் தேரர்களின் ஆலோசனையின்றி நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போதைய நிலையில் உசிதமாகத் தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் இன ஒற்றுமை ஏற்பட்டுக் கொண்டு வருகி;னற இக்காலக்கட்டத்தில் அமைதியற்ற ஒரு நிலையை உருவாக்குவதுஎன்ற ஒரு அவப் பெயருக்கு இடமளிக்காது பாhத்துக் டிகாள்ள வேண்டிய கட்டாய நிலை இரு;பபதாகவும் தெரிவித்தார்.
இதுவிடயமாகஇனவாதக் குழு ஒன்று ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மினாரம் கட்டும் வேலை மதங்களுக்கிடையில் பிரச்சினையை உருவாக்கும் என்றால் இதை கட்டாமல் இருப்பதே அமைதியயும்,ஒற்றுமையும்,அந்நிய மதங்களுடனான சக வாழ்வை போதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் எங்களுக்கு சிறந்த விடயம்.
ReplyDeleteபுனித ரமழான் மாதத்தையும் நாம் எதிர்னோக்கியுள்ள இந்த நேரத்தில் பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பதும் சிறந்தது
Well said brother...
DeleteMASJITHGALAI AADAMBARAMAHA KATTI ADIL ADIGAM BITHATHU THAAN SEGIRARGAL MINARA ORU ISALTHIN ADIPADAI ILLAI
ReplyDeleteகண்டி KCC கட்டடம் தற்போது இருப்பதை விட இரண்டு மாடிகள் அதிகமாக திட்டமிடப்பட்டிருந்தது நம்மில் அனேகருக்குத் தெரியாது.
ReplyDelete