Header Ads



பூகொடையிலிருந்து மக்கள் வெளியேற்றம்- அவசர உதவிகளுக்கு 117க்கு அழைக்கவும்


கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள பாரிய தீ விபத்து காரணமாக வெளியேறியுள்ள மக்கள், உணவுத் தேவை உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு 117 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்புகொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கனரக பீரங்கித் துப்பாக்கிச் சன்னங்கள் வெடித்துச் சிதறியமையால் ஹங்வெல்ல மற்றும் பூகொட உள்ளிட்ட பிரதேச மக்கள் உடனடியாக பொலிஸாரால் வெளியேற்றப்பட்டனர்.  இதேவேளை, சலாவ இராணுவ முகாமிலிருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவே பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாகவும் அச்சம் காரணமாக வெளியேறியுள்ள ஏனைய மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பலாம் எனவும் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.  எனினும், 6 கிலோமீட்டர் சுற்றளவு வரை பாதுகாப்பற்ற பிரதேசங்களாக இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற பகுதியை அண்மித்த பகுதியான பூகொடையிலிருந்து 600 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேறியிருப்பதாக ஊடகங்கள் தகவ்ல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.