Header Ads



நசீர் விவகாரம், இன்னும் ஓயவில்லை - 3 நாட்களில் அறிக்கை கேட்கும் ரணில்

பாதுகாப்புத் தரப்பினரின் நடவடிக்கைகள் குறித்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பூர் மகா வித்தியாலயத்தில் அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கடற்படை உயர் அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு படையினர் நடந்து கொண்ட விதம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கருத்துக்கள் தொடர்பில் மூன்று நாட்ளுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர், பாதுகாப்பு அமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தின் பின்னர் பதுகாப்பு தரப்பினர் செயற்பட்ட விதம் குறித்து அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் நேற்று -02- அலரி மாளிகையில் பிரதமருக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

இதனைத் தொடாந்தே பிரதமர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

பிரதமர் தென்கொரியாவிற்கு விஜயம் செய்ய முன்னதாக பாதுகாப்பு செயலாளா கருணாசேன ஹெட்டியாராச்சி, கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன ஆகியோரை அழைத்தும், கிழக்கு மாகாண முதலமைச்சருடன் தொலைபேசி ஊடாகவும் பேசி பிரச்சினையை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்திருந்த நிலையில், சில பாதுகாப்பு அதிகாரிகள் சர்ச்சை எழும் வகையில் செயற்பட்டுள்ளதாக அமைச்சர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உதாரணங்களுடன் இந்த சம்பவங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் பிரவேசிக்க முடியாது என உத்தரவு இடுவதற்கு ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு,

ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்காது அவ்வாறான உத்தரவுகளை எடுக்க முடியாது என பிரதமர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. மழை விட்டும் விடாத தூவானம்!

    ReplyDelete
  2. They already had a BIRIYANI Party. Ranil - You are always late.......

    ReplyDelete

Powered by Blogger.