லெஸ்டர் இஸ்லாஹ் ட்ரஸ்ட், தொண்டு நிறுவனத்தின் அறிவித்தல்
இலங்கையின் பல பாகங்களில் பெய்து வரும் தொடர் மழையால் கடும் சேதங்கள் நடந்து வருகின்றன. உயிரிழப்பு, பொருளிழப்பு, வீடிழப்பு என மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில் அவர்களுக்கென தம்மாலான உதவிகளை செய்வதற்காக இங்கிலாந்தில் லெஸ்டர் (Leicester) எனும் ஊரில் இயங்கிக் கொண்டிருக்கும் சமூக அமைப்பான இஸ்லாஹ் ட்ரஸ்ட் (Islah Trust Reg. Charity No: 1161289) எனும் தொண்டு நிறுவனம் வெள்ளிக்கிழமை (20/05/2016) ஜும்மா தொழுகையின் பின் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதியை சேகரித்தது . சமூகமளித்திருந்த அனைவரும் தம்மாலான பணவுதவிகளை தந்துதவினர்.
குறுகிய நேரத்திற்குள் இலங்கை நாணயப்படி ரூபா அரை மில்லியனுக்கும் அதிகமான பணம் வசூல் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன். மேலும் இத்தோடு நின்று விடாமல் இஸ்லாஹ் ட்ரஸ்ட் நிர்வாகம் மும்முராமாக பண வசூளிப்பில் ஈடுபட்டு வருகின்றது.
எமது பாதிக்கபட்ட மக்களுக்கு உதவிகள் செய்ய விரும்புவோர் இஸ்லாஹ் ட்ரஸ்டின் (Islah Trust) கீழ்கண்ட வங்கிக் கணக்கில் பண வைப்பீடு செய்யவும் அல்லது நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம். ஜசாக்கல்லாஹு ஹைரன்.
Bank Account details as follows:
ISLAH TRUST
A/C No: 03601358
S/C: 20-49-17
Ref: SL Flood 16
Barclays Bank
Contact Details: 07411132976 / 07877732634
இஸ்லாஹ் ட்ரஸ்ட் நிர்வாகம்


Post a Comment