கொலன்னாவை பிரதேசத்தில் இருக்கும், ஒரு சகோதரரின் எதிர்பார்ப்பும் கவலையும்
-அர்ரஹீக்குல் மக்தூம்-
மரத்திலிருந்து விழுந்தவரை மாடு குத்தியதுபோல் அவரின் நிலை
எங்கு எது நடந்தாலும் முன்னின்று உயிரையும் பணயவேயித்து எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவக்கூடிய மனிதர்கள்தான் பேருவலை இளஞ்சர்கள் குறிப்பாக மருதனை என்கின்ற ஊரில் இருக்கும் வாலிபர்கள் அவர்களிடம் பண வசதிகள் இல்லாவிட்டாலும் மனிதனாக வாழ எது முக்கியமோ அந்த மனிதநேயம் நிறையவே உண்டு இவர்களிடம்
அப்படியான ஊரில் இருக்கும் ஒரு சகோதரரின் ஏக்கம்
நேற்று -22- கொலன்னாவையில் இருக்கும் ஒரு சகோதரரை சந்தித்தேன் அவர் நம்ம ஊரைச் சார்ந்தவர்தான் அதாவது பேருவலை அவர் இருப்பது கொலன்னாவை.
நேற்று நண்பர்களுடன் கொலன்னாவை சென்றபோது, நம்ம கூட சென்ற நண்பர் ஒருவர் தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு வாங்க உங்கள் வீட்டின் நிலவரம் என்ன என்பதை பார்த்துவிட்டு வரலாம் என்று அழைத்ததும் அவரும் அந்த இடத்துக்கு சிரித்துக்கொண்டே வந்தார். படகில் ஏறியதும் அவரிடம் நானும் என்கூட வந்த நண்பனும் விளையாட்டாக சொன்னேன் உங்களை படகில் இருந்து தள்ளிவிட்டு பிறகு உங்கள் உறவினருக்கு கால் செய்து சொல்லவா உங்கள் உறவினர் வெள்ளத்தில் மூழ்கிக் உயிருக்கு போராடுகிறார் அவரை நாங்கள் உயிரைப்பனயவேய்த்து காப்பாற்றவா அப்படி காப்பாற்றினால் எங்களுக்கு எவ்வளவு பணம் தருவீங்கள் என்று சொல்லவா என்றேன்
அதற்க்கு அவர் வேன்றாம்டா நீ கால்
செய்து அப்படி சொன்னால் அவர்கள் சொல்வார்கள் எங்க உறவினர்கள் அப்படி யாரும் அங்கு இல்லை என்பார்கள்
இவ்வளவு நடந்ததும் என் வாகனம் என் வீடு சொத்து எல்லாம் இழந்தும் எனக்கு கவலையில்லை. எனக்கு கவலையெல்லாம் இவ்வளவு நடந்ததும் இதுவரையில் எந்தவிதமான தொலைபேசி தொடர்பும் இல்லாத என் கூடப்பிறந்த சகோதரனை நினைத்துதான் இதுவரையில் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என்று ரொம்ப ரொம்ப கவலையுடன் சொன்னார்.
இவரின் சகோதரர்கள் ஊரில் வசதிகளுடன் வாழ்பவர்கள்தான். இவரும் யாரிடமும் கையேந்தும் நிலையில் இல்லை. இவரும் ஓரளவு வசதிகளுடன் வால்பவர்தான். இவரின் ஏக்கமெல்லாம் கூடப்பிரந்தவர்களின் எந்தவிதமான தொடர்பும் இல்லாததுதான்.
யா அல்லாஹ் இதுபோல் கவலையுடனும் ஏக்கங்களுடனும் வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் மனநிம்மதியையும் வாழ்வில் பரக்கத்தையும் செய்வாயாக
இலங்கையில் வாலும் அனைத்து உறவுகளுக்கும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் அங்கங்கே பாதிக்கப்பட்ட உங்கள் உறவுகளை இன்றைய தொடர்புகொள்ளுங்கள் அவர்களின் கவலைகள் பாதியாவது குறையும்
உறவு என்றால் என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர்
நபி (ஸல்) அவர்கள் என்ன கூறுகிறார்
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில்
நுழைய மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி),
நூல்: புகாரி 5984
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த
போது, உறவானது எழுந்து அன்பாளன்
அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில்
ஒன்றைப் பற்றியது. அப்போது அல்லாஹ், ''என்ன?'' என்று கேட்டான். அதற்கு உறவு, ''உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து
உன்னிடம் பாதுகாப்பு கோரி
நிற்கின்றேன்'' என்று கூறியது. ''உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து
கொள்பவருடன் நானும் நல்ல முறையில்
நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத்
துண்டித்து விடுகின்றவரை நானும்
துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத்
திருப்தியளிக்கவில்லையா?'' என்று
கேட்டான். அதற்கு உறவு, ''ஆம், என்
இறைவா'' என்று கூறியது. அல்லாஹ், ''இது உனக்காக நடக்கும்'' என்று
கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''நீங்கள்
புறக்கணித்து பூமியில் குழப்பம்
ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை
முறிக்கவும் முயல்வீர்களா?'' என்ற (47:22)
வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்
கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:
புகாரி 5987
உறவை சேர்த்து வாழ்தல்
உலகத்திலேயே கிடைக்கும் பலன்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறுகின்றார்கள்.
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட
வேண்டும் அல்லது தமது வாழ்நாள்
அதிகரிக்கப்பட வேண்டும் என்று
விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன்
சேர்ந்து வாழட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி 2067

Post a Comment