நிவாரணப் பொருட்கள் வாங்கினா, மானம் போயிடும் (முஸ்லிம் சகோதரியின் அச்சம்)
Riz Rizwan-
வௌ்ளததால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் போனில் தொடர்பு கொண்டபோது....,
நான் ...... ''இப்போ நிலமை எப்படி இருக்கு மா?
நண்பி - நீர்மட்டம் குறைந்து வருவதாக தான் சொல்றாங்க.ஆனா வீடு வாசல் சாமான்கள் என்றால் இனி திருப்பி எடுப்பதற்கு ஒன்றுமில்லை என நினைக்கிறன். இன்னும் முகாம்களில் தான் (கவலையுடன்..)
நான் - ஓஹ்... அப்போ நேரத்திற்கு சாப்பாடு தேவையான பொருட்கள் , குழந்தைக்கு பால்மா ஏதும் கிடைக்கிறதா?
நண்பி - வாறாங்க... ஒவ்வொரு ஊர்ல இருந்து வாராங்கள். தாராங்கள். ஆனா கைய நீட்டி எடுக்கதான் பயமாய் உள்ளது (சொன்னவாறே சிரித்து விட்டாள்...)
நான்-ஏன் டி? ஏன் அப்படி சொல்ற?
நண்பி- ஒரு கையில உணவு , இதர பொருட்கள்.. மறு கையில கூடவே கேமிரா போனையும் நீட்டிட்டு வாறாங்க. தப்பி தவறி மூஞ்சிபுக்ல (பேஸ்புக்) போட்டுட்டாங்கனா மானம் போயிடும். அதான் பயமா இருக்கு.....
#ஙேஙேஙே.......
அந்த துயரத்திலும் வழமைய போல் சிரிப்பு கதை பேசும் அவளை பார்த்து சிரிப்பதா அல்லது.. அவள் கதையில் உள்ள நிலை எண்ணி வருந்துவதா???

உண்மைதான்
ReplyDeleteசிந்திபவர்களுக்கு மிக முக்கியமான படிப்பினை தரும் நிகழ்ச்சி.
ReplyDeleteஇத்தகைய சந்தர்ப்பங்களில் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக உரியவர்களிடம் அனுமதி எடுத்துவிட்டு போட்டோ எடுத்து கொள்ளுங்கள்.
ReplyDeleteமுற்றிலும் உண்மை தான் எல்லாம் பப்லிசிடி க்கு தான் செய்றானுகள்
ReplyDeleteitharkku yanna photo vendi kidakku
ReplyDelete