Header Ads



வசீம் தாஜுதீன் படுகொலை அச்சம் - ரணிலை திட்டித்தீர்த்த மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மதுபோதையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகாரிகளை கடுமையாக திட்டித்தீர்த்துள்ளார்.

நேற்றையதினம் -23- மாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலைச் சம்பவம் தொடர்பில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனநாயக்க நேற்றுக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் குறித்த விவகாரத்தில் மட்டுமன்றி ஏனைய குற்றச்சாட்டுகளின் பேரிலும் தனது குடும்ப உறுப்பினர்கள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசி வழியாக தொடர்புபடுத்துமாறு அவர் தன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனினும் பல தடவைகள் முயன்றும் முடியாமல் போக அது குறித்து அவர்கள் மஹிந்தவிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ தானே நேரடியாக பிரதமரின் தனிப்பட்ட இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அழைப்புக்கு பிரதமர் அலுவலக அதிகாரிகளே பதிலளித்துள்ளனர்.

இதன் காரணமாக கடும் கோபமடைந்த மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் அலுவலக அதிகாரிகளை கடுமையாக திட்டித்தீர்த்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மஹிந்தவின் அழைப்புக்கு பிரதமரைத் தொடர்பு படுத்தவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

1 comment:

  1. Allah is punishing mahinda via mentally. It is very effect one

    ReplyDelete

Powered by Blogger.