Header Ads



பொய் குற்றச்சாட்டு, ஏற்படுத்தும் பாதிப்பை பாருங்கள்..!


நான் என்னுடைய இருபது வயதை எட்டாத நிலையில் என்னை சிறையில் அடைத்தார்கள். இப்பொழுது எனக்கு 43 வயதாகிறது. நான் என்னுடைய இளைய தங்கையை கடைசியாக பார்த்த பொழுது அவளுக்கு 12 வயது. ஆனால் இப்பொழுது அவளுடைய மகளின் வயதே 12 ஆகிறது.

என்னுடைய இன்னொரு மருமகளுக்கு அன்று ஒரு வயதாக இருந்தது. இப்பொழுது அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது.

என்னுடைய அண்ணி என்னைவிட இரண்டு வயது இளையவர். ஆனால் அவர் இப்பொழுது பேரக்குழந்தைகள் கிடைக்கப்பெற்று பாட்டியாக இருக்கிறார்.
என்னை சிறையில் அடைத்ததன் மூலம் ஒரு தலைமுறையையே நான் இழந்துள்ளேன்.

மொத்தம் 8,150 நாட்களை நான் சிறையில் கழித்துள்ளேன். என்னைப் பொருத்தவரை என் வாழ்க்கை முடிந்து விட்டது. நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு நடமாடும் பிணத்தையே.
- நிஸாருத்தீன் அஹமத்.

பாபர் மஸ்ஜித் இடிப்பின் முதலாமாண்டு நினைவு நாளில் ரயிலில் குண்டு வைத்தாக பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். 23 ஆண்டுகள் கழித்து கடந்த 11 ஆம் தேதி நிரபராதி என்று விடுவிக்கப்பட்டவர்.

நன்றி : அன்பின் அறிவழகன்

3 comments:

  1. பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு அல்லாஹ் இருக்கின்றான். அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ மறுக்கப்படுவதில்லை. நிலையான மறுமையில் இன்சா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் சந்தோசமான வாழ்க்கையை வழங்குவான். இன்னும் நீங்கள் இவ்வுலகில் அல்லாஹ்வின் திருப்திக்காக எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியும். மனம் தளர்ந்து விடாதீர்கள். இதற்காக இனி நீங்கள் ஒரு புத்துணர்வோடு செயற்படுங்கள். அல்லாஹ் உங்களது ஈருலக வாழ்க்கையையும் சந்தோசப்படுத்துவானாக.

    ReplyDelete
  2. THAT IS DIGITAL INDIA...........?

    ReplyDelete
  3. mohamed fayees mohamed ismail kooriyethu ponru nilaiyatre ulahaivide nirenthere marumaiyil insha allah ungalukku suhamane vaalkai kittum

    ReplyDelete

Powered by Blogger.