Header Ads



பாதிக்­கப்­பட்­ட மக்களுக்கு உத­வி­செய்­ய, அர­சாங்கம் அக்­கறை காட்­ட­வில்லை - மஹிந்த சீற்றம்


வெள்­ளத்தால் நாட்­டு­மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­போ­திலும் அவர்­க­ளுக்­கான உத­வி­களை செய்­வதில் அர­சாங்கம் அக்­கறை காட்­ட­வில்லை. மக்­களின் தேவைக்­கேற்­ற­வாறு நிவா­ரண ஒதுக்­கீடு அமை­ய­வில்லை. இந்த அர­சாங்கம் நிவா­ர­ணங்­க­ளையும் சர்­வ­தேசம் தரும் வரையில் பார்த்­துக்­கொண்­டுதான் உள்­ளது என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

வடக்கில் புலி­களை நினை­வு­கூர முன்­னு­ரிமை வழங்கும் அர­சாங்கம் நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்திக் கொடுத்த இரா­ணுவ வீரர்­களின் வெற்றி தினத்தை புறக்­க­ணித்­துள்­ளது எனவும் அவர் குறி­ப்பிட்டார்.

குரு­நாகல் மாவட்­டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மக்­களை சந்­தித்­த­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் பாது­காப்பு நிலை­மைகள் மற்றும் புல­னாய்வு செயற்­பா­டுகள் திருப்­தி­க­ர­மாக அமை­ய­வில்லை. ஆட்சி மாற்­றத்தில் இருந்து நாட்டில் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. குறிப்­பாக ஆட்சி மாற்­றத்தை வட­மா­காணம் சாத­க­மாக பயன்­ப­டுத்­தி­கொள்ளும் நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் கடந்த காலங்­களில் வடக்கில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் மற்றும் அவர்­களின் அர­சியல் நகர்­வுகள் நாட்டில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லேயே அமைந்­தி­ருந்­தன. அதை நிரூ­பிக்கும் வகையில் இப்­போது வடக்கில் விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வா­தத்தை நினை­வு­கூர்ந்­துள்­ளனர்.

எனினும் இந்த செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்கம் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. வடக்கில் புலி­களை நினை­வு­கூர முன்­னு­ரிமை வழங்கும் அர­சாங்கம் நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்திக் கொடுத்த இரா­ணுவ வீரர்­களின் வெற்றி தினத்தை புறக்­க­ணித்­துள்­ளது. யுத்தம் வெற்­றி­கொள்­ளப்­பட்­டதில் இருந்து இந்த நாட்டில் இரா­ணுவ வெற்றி தின­மாக கொண்­டா­டப்­பட்­டு­வந்த தினம் இந்த ஆட்­சியில் சாதா­ரண அனுஷ்­டிப்பு தின­மாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அதா­வது எமது வெற்­றியை நிரா­க­ரிக்கும் வேலை­யினை அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது. இம்­முறை நிகழ்­வு­க­ளுக்கு அர­சாங்கம் எமக்கு அழைப்பு விடுக்­க­வில்லை. அதை வெளிப்­ப­டை­யா­கவே அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். எனினும் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த எம்மை அர­சாங்கம் நிரா­க­ரித்­தாலும் நாம் தொடர்ந்தும் இரா­ணுவ வெற்­றி­தி­னத்தை கொண்­டா­டுவோம்.

மே 19ஆம் திகதி இரா­ணுவ வெற்றி தினத்தை குரு­நா­கலில் கொண்­டாட நாம் தயா­ரா­கிக்­கொண்­டி­ருந்த நிலையில் நாட்டில் ஏற்­பட்ட இயற்கை அனர்த்தம் கார­ண­மாக அனைத்து மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். எனவே இவ்­வா­றான நிலையில் எமது நிகழ்­வு­களை நாம் பிற்­போட்டோம். எனினும் நிலை­மைகள் வழ­மைக்கு திரும்­பி­ய­வுடன் நாம் மீண்டும் வெற்றி தினத்தை கொண்­டா­டுவோம்.

யுத்த சூழல் நில­வி­னாலும் இல்­லா­விட்­டாலும் நாட்டில் தேசிய பாது­காப்பை பல­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. எந்த அர­சாங்­க­மாக இருந்­தாலும் நாட்டின் தேசிய பாது­காப்பில் அதிக அக்­கறை காட்­ட­வேண்­டிய தேவை உள்­ளது. இந்த அர­சாங்­கமும் தேசிய பாது­காப்பு தொடர்பில் அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும் என நினைக்­கின்றேன். வடக்கில் நடக்கும் மோச­மான சம்­ப­வங்கள் தொடர்பில் சாதா­ரண கண்­ணோட்­டத்தில் பார்க்­காது தீவி­ர­மாக ஆராய்ந்து பாது­காப்பில் அதிக அக்­கறை காட்­ட­வேண்டும்.

வடக்கில் இருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட்ட போதும், புல­னாய்வு பிரிவை கட்­டுப்­ப­டுத்­திய போதும் நாம் எச்­ச­ரிக்கை விடுத்தோம். வடக்கில் எப்­போ­துமே பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் உள்­ளது என நாம் கூறினோம். இப்­போதும் அதையே நாம் தெரி­விக்­கின்றோம். எனினும் அர­சாங்கம் அக்­கறை செலுத்­து­வ­தாக தெரி­ய­வில்லை.

அர­சாங்கம் நாட்டை மிகவும் மோச­மான பாதையில் கொண்டு சென்­றுள்­ளது. நாட்டின் பொரு­ளா­தாரம் முழு­மை­யாக வீழ்ச்­சி­ய­டையும் நிலையில் உள்­ளது. பொருட்­களின் வரி இரு­ம­டங்கு அதி­க­ரித்து சென்­றுள்­ளது. இன்­றைய நிலையில் விலை குறைக்­க­வேண்­டிய பொருட்கள் அனைத்­திற்கும் இரு­ம­டங்கு வரி அதி­க­ரித்து மக்­களின் வயிற்றில் நெருப்பை கொட்­டி­யுள்­ளனர். மக்கள் இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்­தி­க­ளையும் நன்மைகளையும் உணர ஆரம்பித்துள்ளனர். கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் இன்று காற்றில் பறந்துவிட்டன. அதேபோல் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களுக்கான உதவிகளை செய்வதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. மக்களின் தேவைக்கேற்றவாறு நிவாரண ஒதுக்கீடு அமையவில்லை. இந்த அரசாங்கம் நிவாரணங்களையும் சர்வதேசம் தரும் வரையில் பார்த்துக்கொண்டுதான் உள்ளது என்றார்.

5 comments:

  1. Hi.TSUNAMI HERO.TOU SWALLOW ALL FORIEGN AID.IN THE PAST.YOU DONT HAVE RIGHTS TO TALK .HELPING AMBANTOTA CASE STILL SRILANKANS NOT FORGOT

    ReplyDelete
  2. Sri Lankan public are no more foolish to trust you and your gang

    ReplyDelete
  3. Uncle this is Not the time for POLITICal Gains

    ReplyDelete
  4. நாம் முன்னாடியும் பின்னாடியும் பொத்திட்டு இருந்தாலே போதும் நாடு உருப்பட்டுவிடும்.

    ReplyDelete
  5. Eventhough Mahinda shot himself in his foot earlier, now what he utters are truth. Yes, this so-called good governance thrash the ordinary people of this country by increasing the price of livelihood.

    ReplyDelete

Powered by Blogger.