Header Ads



மத்தள விமான நிலையம் குறித்து, சர்வதேச சஞ்சிகை சிவப்புக் கட்டுரை

உலகின் வெறுமையான ஒரே விமான நிலையமாக மத்தள விமான நிலையம் காணப்படுவதாக போர்ப்ஸ் சஞ்சிகையின் விபரணக் கட்டுரையொன்று தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதும் உலகின் பாரிய விமானங்கள் எல்லாம் வந்து போகும் என்று வர்ணிக்கப்பட்டதுமான மத்தள விமானநிலையம் பற்றி போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை எழுத்தாளர் வேட் ஷெபர்ட் எழுதியுள்ளார்.

அவர் தனது கட்டுரையில் மத்தள விமான நிலையம் தொடர்பாக குறிப்பிடும்போது '' நான் அங்கு உள்ளே நுழைந்த பின் என்னைத் தவிர எந்தவொரு பயணியையும் நான் காணவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கட்டுரையில் அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடம் என்பதற்காகவே அதனைப் பார்வையிட பலர் வருவதாகவும் அதனைத் தவிர உலகின் வெறுமையான ஒரே விமான நிலையம் மத்தள விமான நிலையம் தான் என வலியுறுத்தியுள்ளார்.

உலகின் பெரும்பாலான விமான நிலையங்களில் காணப்படும் அதிநவீன வசதிகள் பல காணப்பட்ட போதும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தி நடவடிக்கையே மக்கள் அங்கு செல்லாமல் இருப்பதற்கான காரணம் என மேலும் அவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.