Header Ads



புலிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய, மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா ஓய்வு


இராணுவத்தில் இருந்து நேற்றுடன் -05- ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு, அவரது தாய்ப் படைப்பிரிவான இலகு காலாட்படைப் பிரிவினால் பிரியாவிடை அளிக்கப்பட்டது.

பனாகொடவில் உள்ள இலகு காலாட்படைப் பிரிவின் தலைமையகத்தில் நேற்று மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய இவருக்கு, பிரியாவிடை அளிக்கும் வகையில், தேனீர் விருந்துபசாரம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

புலிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றிய இராணுவத்தில் இருந்து, ஓய்வுபெறும், அதிகாரிகளில் இவர் இரண்டாமவராவார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு டிசெம்பர் 25ஆம் நாள், மேஜர் ஜெனரல் ஜெயத் டயஸ் ஒய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.