Header Ads



தாஜுதீனின் சடலத்துக்கு செய்வது போன்ற, வதையை எங்கும் கண்டதில்லை - விமல் வீரவன்ச

ஒரு காலத்தில் இந்த அரசாங்கம் யோசித்தவை இலக்கு வைத்துக் கொண்டு ஓம் கிறீன் தாஜுதீன் வர.. வர.. தாஜுதீன் வர.. வர.. என மந்திரம் முழங்கியது.

தாஜுதீனின் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யோசித்த வெளிநாட்டில் காணப்பட்டதனால், மீண்டும் அரசாங்கம் வேறு ஒரு மந்திரத்தை மொழிய ஆரம்பித்தது. அதுதான் ஓம் கிறீன் தாஜுதீன் போ.. போ… தாஜுதீன் போ… போ…

இவ்வாறு மஹிந்த சார்பு குழு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மே தின உரையின் போது தெரிவித்தார்.

இந்த மே தினக் கூட்டத்தை நிறுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை இல்லாமல் செய்ய அரசாங்கம் முயற்சி செய்தது. அதுவும் கைகூட இல்லை.

தற்பொழுது மீண்டும் ஜனாதிபதி மாளிகையில் வைத்து தாஜுதீன் வர … வர… என்ற மந்திரம் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

ஐயோ..! நான் அறிந்த வரலாற்றில், இந்த தாஜுதீனின் சடலத்துக்கு செய்வது போன்ற ஒரு வதையை எங்கும் கண்டதில்லை.

ஆரம்பத்தில் யோசித்த தாஜுதீனைக் கொலை செய்தார் எனக் குறிப்பிட்டனர்.

யோசித்தவின் காதலியுடன் தாஜுதீனுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததனால், அவர் மேல் கொண்ட கோபம் கொலைக்கான காரணமாக குறிப்பிடப்பட்டது.

பின்னர், தாஜுதீனைக் கொலை செய்தவர் நாமல் எனத் தெரிவிக்கப்பட்டது.

ரகர் விளையாட்டு அமைப்பின் பொறுப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் இருவருக்கிடையில் காணப்பட்ட போட்டி நிலை இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.

ஒரு கொலைக்கு இரண்டு கதைகள். இந்தியாவில் மசாலா திரைப்படம் ஒன்றிலாவது இதுபோன்ற நகைச்சுவை கிடையாது.

மீண்டும், நாரஹேன்பிட்டி, ஓ.ஐ.சி. பொலிஸ் அதிகாரியிடம் டைப் செய்யப்பட்டு எடுத்து வரப்பட்ட கடிதத்தில் பலாத்காரமாக ஒப்பம் பெறப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் நாமலின் பெயரைப் போடுங்கள், கோத்தபாயவின் பெயரைப் போடுங்கள் என பொலிஸ் ஓ.ஐ.ஸி. நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தான் இவர்கள் சாட்சிகளை உருவாக்குகின்றனர்.

இந்த நாட்டில் நீதிமன்றம் சுதந்திரமாக செயற்படுவதாக இருந்தால், இந்த காட்டுமிராண்டித் தனமான அரசியல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்.

நாம் இந்த அராஜக அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரண்டு விட வேண்டும். இந்த அரசாங்கத்தை வெளியேற்ற வீதியில் இறங்குவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இவர் சொல்ல்வாதிலும் சரியான விடயம் உண்டு.காரணம் இன்னும் இந்த அரசாங்கத்துக்கு கொலையாளியை கண்டு பிடிக்கயோ அல்லது இதுவரையும் கண்டு பிடித்த குற்றவாளியை இவர்தான் என்று சொல்லவோ முடியாத நிலையில் உள்ளது.சகல கள்ளர்களுக்கும் பொதுத்தேர்தலின் பின் கட கட வென நடவடிக்கை என்றார்கள் பின் ஒவ்வொன்றாக பின் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இப்போது மே தினத்தின் பின் என்ற சொல் அடிபடுகிறது.அதனால் எதிர்த்தரப்பினர் கிண்டல் செய்யும் அளவுக்கு நிலைமை போய்க்கொண்டு இருக்கிறது .

    ReplyDelete

Powered by Blogger.