Header Ads



'தாம் எதிர்வு கூறியவையே, இன்று இடம்பெறுகிறதாம்..' திஸ்ஸ

தாம் எதிர்வு கூறியவையே இன்று வட மாகாணத்தில் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் தமது எதிர்வு கூறல்களை சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணசபை சில தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும், வெளிநாட்டு நேரடி உதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இன்று எதிர்வு கூறிய விடயங்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு உள்ளதாகவும், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி பீடம் ஏறினால் நாடு பிளவடையும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார். இது தொடர்பிலான ஆவணமொன்றையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கையொப்பங்கள் போலியாக இடப்பட்டுள்ளதாகவும் போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸ அத்தநாயக்க மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.