Header Ads



முஸ்லிம் எய்ட், நிவாரண பணிகள்

(அஸீம் கிலாப்தீன்)

இன்று 24ம் திகதி கொலன்னாவ எம்ஓஎச் வைத்திய அதிகாரிகள் கொலன்னாவ பிரதேசத்திலுள்ள பல்வேறு அகதிகள் முகாம்களிலும் நடைபெறுகின்ற மருத்துவ முகாம் மற்றும் சிகிச்சைகளை தொடர்ச்சியாக பரிசீலனை செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான வாகனங்களையும் தொண்டர்களையும் முஸ்லிம் எய்ட் மற்றும் எஸ்எப்ஆர்டி ஆகிய அமைப்புகள் வழங்கியிருந்தன.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் அனைத்து முகாம்களிலும் மருத்துவ முகாம்கள் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள அதிரடிப் பணிகளுக்கு பங்களிப்பும் ஒத்துழைப்பும் வழங்குவது எனவும் அதற்கு அனைத்து முஸ்லிம் சிவில் மற்றும் நிவாரண அமைப்புகளும் பங்களிப்புகளில் ஈடுபடல் வேண்டும் எனவும் முஸ்லிம் சிவில் மற்றும் நிவாரண அமைப்புகளின் ஒன்றியம் தீர்மானம் மேற்கொண்டிருந்தது. இதன் மூலமாக முகாம்களிலுள்ள அகதிகளும் வீடுகளுக்குச் செல்லும்  அகதிகளும் முகம் கொடுக்கும் சுகாதாரப் பிரச்சனைக்கு தீர்வினை விரைவாகப் பெற்றுக் கொள்ள முடியும்.   ஆர்சீசீ மேற்கொண்டுள்ள இவ் அநுசரனை முயற்சிக்கு இவ் ஒன்றியத்தின் கீழ் வரும் அமைப்புகளில் ஒன்றான முஸ்லிம் எய்ட் மேற்படி மருத்துவ செயற்பாடுகளுக்;கான வாகன மற்றும் தொண்டர்களை வழங்கியிருந்தது.

அத்துடன், முஸ்லிம் எய்ட் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் இன்றும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

No comments

Powered by Blogger.