Header Ads



சென்னையிலிருந்து படகில் வந்து, மைத்திரியை கொலைசெய்ய மகிந்த அணி முயற்சி


ஜனாதிபதி (மைத்திரிபால சிறிசேன) உட்பட  எம்மை கொலை செய்வதற்கும் மஹிந்த  அணி முயற்சிகளை மேற்கொண்டது.  இன்னமும்  எமக்கு மரண அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. 

சென்னையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்து எம்மை கொலை செய்து விட்டு  கொலையாளிகள் தப்பிவிடுவார்கள். இதனால் கொலையாளிகள் யாரென்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். இவ்வாறு திட்டம் தீட்டப்பட்டது என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார  அமைச்சருமான டாக்டர் ராஜித  சேனாரத்தன தெரிவித்தார்.

கடந்த தேர்தல்களில்  நாம் வெற்றி பெற்றிருக்காவிட்டால் இன்று நாம் உயிரோடு இல்லை. இவையனைத்தையும் தெரிந்துகொண்டு தான் பலப்பரீட்சையில்  இறங்கினோம் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.