Header Ads



மகிந்த ராஜபக்ஷ தப்பிக்க முடியாது, இதுதொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லையாம்...!

மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே அவர் தன்னை கறைபடியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம்  ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை   பதுக்கி வைத்து இன்று வரை  அவை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாத வண்ணம்   மிகவும்  சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ   நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்த  ராஜபக்ஷவும்  அவரது மோசடிக்கார கும்பலும்  சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் கைதாவார்கள். மேலும் இந்த மோசடிக்காரர்களை  பாதுகாக்க  அமைச்சரவைக்குள்ளும் சில  புள்ளுருவிகள் இருப்பதாகவும் அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டது.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று -11- இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சரவை  பேச்சாளரும், சுகாதார  அமைச்சருமான  டாக்டர் ராஜித  சேனாரத்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடிப்பதற்கு  புதிய   திட்டங்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளுடன் இணைந்து  விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். 

அதற்கான பல நடைமுறைகள்  உள்ளன. எனவே  விசாரணைகள்  முழுமை பெற காலதாமதமாகும். ஆனால்  மஹிந்த  ராஜபக்ஷ தனது  மோசடிகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. 

 விரைவில் விசாரணைகள்  முடிவடையும்.  மோசடிக்காரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். மஹிந்த  உட்பட அவரது சகாக்கள் கைது செய்யப்படுவார்கள். 

 யார் என்ன  முயற்சி செய்தாலும் மஹிந்த சட்டத்திலிருந்து  தப்பிக்க முடியாது. இது தொடர்பில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

3 comments:

  1. Ennatha solla.. Athu sari thajudheen case eppa mudiyum.. ratna lanka ennachchu.. sajin vas case ennachchu..

    ReplyDelete
  2. எத்தனை நாளைக்குத்தான் இப்படி சொல்லி காலம் கடத்த போகின்றீர்கள். உங்கள் அரசாங்கம் கைது செய்யபோவதும் இல்லை அப்படி கைதுசெய்தாலும் அது வெறும் கண்துடைப்பாகவே கண்டிப்பாக நோக்க முடியும். எல்லாம் அரசியல் நாடகம்.........

    ReplyDelete
  3. All that is drama....he...he....

    ReplyDelete

Powered by Blogger.