வெள்ள ஆபத்து முழுமையாக நீங்கவில்லை - அவதானமாக இருக்க வேண்டுகோள்
களனி ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வெள்ள ஆபத்து இன்னும் முற்றாக நீங்கவில்லை என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் கொழும்பு, தொட்டலங்க , நாகலகம் வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீரின் உயர அளவீட்டுப் பலகையின் தரவுகளுக்கேற்ப களனி ஆற்றின் அருகாமைப் பிரதேசங்களில் ஏழரை மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கின்றது.
இந்த நீர் முற்றாக வடிந்து செல்வதற்கு இன்னும் இரண்டு நாட்கள் வரை பிடிக்கும்.அதே நேரம் களனி ஆற்றின் உற்பத்திப் பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் நிலை நீடித்தால் களனி ஆற்றின் நீர் மட்டம் குறைவதற்கு இன்னும் பல நாட்கள் வரை செல்லும்.
அத்துடன் மீண்டும் வெள்ள அபாயமும் ஏற்படலாம். எனவே வெள்ளநீர் முற்றாக வடிய முன்பாக பொதுமக்கள் யாரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம் என்றும் நீர்ப்பாசன திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கிடையே தொடர்ந்தும் ஏழு மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் இருப்பதாக கட்டிட மற்றும் மண்சரிதவியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Post a Comment