எரிபொருளுக்குத் தட்டுப்பாடு கிடையாது, விநியோகம் தாமதம்
எரிபொருளுக்குத் தட்டுப்பாடு கிடையாது என இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரீ.ஜீ. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளிலும் போதியளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் வெள்ளப் பாதிப்பு தணியும் வரையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சுத்தப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment