Header Ads



எவரஸ்ட் சிகரத்திற்குச் சென்ற முதல் இலங்கைப் பெண்


உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்து, ஜெயர்தி குரு உதும்பால என்ற இலங்கைப் பெண்மணி இன்று (21) காலை சாதனை படைத்துள்ளார்.

வரலாற்றிலேயே முதன் முதலாக எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இந்த சாதனையைப் படைப்பதற்காக சுமார் ஒருமாதத்திற்கு முன்பே குறித்த பெண்ணும் இவருடன் சேர்ந்து யோஹான் பீரிஸ் என்ற பெண்ணும் இந்தியா பயணித்துள்ளார்கள்.

இவ்வாறு சென்ற பெண்களில் ஜெயர்தி குரு உதும்பால என்ற பெண்மணியே முதலாவதாக சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவரஸ்ட் சிகரமானது உலகிலேயே மிகவும் உயரமான மலை என்பதுடன், கடல் மட்டத்தில் இருந்து 29,029 அடி உயரமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. பெண் என்ற ரீதியிலும் இலங்கையர் என்ற ரீதியிலும் பெருமையுடன் எனது வாழ்த்துக்கள்! பெண்கள் மனது வைத்தால் ஒருகாலத்தில் அவர்களால் முடியாது என்று ஆணாதிக்க அடிப்படைவாதிகள் வகுத்து வைத்த அத்தனையும் சாத்தியமே!

    ReplyDelete

Powered by Blogger.