Header Ads



சரத் பொன்சேகா மஹிந்த பற்றி பேசியதே, பாராளுமன்றில் மோதலுக்கு காரணம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஓர் நிலைமையை அடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் அதிகம் வெறுக்கப்படும் தலைவர்களாக மஹிந்த ராஜபக்ஸவும், கோதபாய ராஜபக்ஸவும் திகழ்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார். எனவே அவர்களின் உயிருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவை ஆபத்தில் ஆழ்த்தும் நோக்கில் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தரப்பினர் தற்போது அவரது உயிருக்கும் ஆபத்தை விளைவிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு பற்றி பேச சந்தர்ப்பம் வழங்கியமையே பாராளுமன்றில் மோதல் சம்பவம் வெடிக்கக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.