அரசாங்கம் கூறுவதை காட்டிலும், இழப்புகள் அதிகம்
தற்போது நாட்டில் நிலவுகின்ற காலநிலை காரணமாக பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
அண்மையில் மண்சரிவுக்குள்ளான அரநாயக்க பிரதேசத்தில் காணாமற் போனோரின் தொகை சம்பந்தமாக அரசு வெளியிட்டுள்ள கணக்கு விபரப் பட்டியலில் குழப்பமிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காணாமற்போனோரின் எண்ணிக்கை 132 என அரச கணக்கெடுப்பு கூறினாலும், அது குறித்த எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கலாம் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் அரநாயக்க மண் சரிவில் 200இற்கும் அதிகமானோர் காணாமற்போயிருக்கலாம் என தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment