Header Ads



டிலான் தலைமையில் ரணிலுக்கு எதிராக சூழ்ச்சி..? மைத்திரியிடம் தகவல்கள் ஒப்படைப்பு

-Tw-

இலங்கை அரசியல் களத்தில் தற்போது சூழ்ச்சிகள் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நடைமுறையிலுள்ள தேசிய அரசாங்கத்தை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டம் ஒன்று மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை ஓரம்கட்டி, சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க சூழ்ச்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலர் சூழ்ச்சியான செயற்பாடொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அமைச்சர் டிலான் பெரேராவின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை, சுதந்திர கட்சியின் பக்கம் இணைத்து கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

எனினும் சூழ்ச்சி தொடர்பான அனைத்து தகவல்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு புலனாய்வாளர்கள் வழங்கியுள்ளனர். இது தொடர்பான தகவல்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் உள்ளதாக என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

எனினும் தற்போது பிரபலமான அரசியல்வாதிகள் பட்டியலில் உயர்ந்த இடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளார். இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவால் விடுக்கும் வகையில் கட்சியை விட்டு எந்தவொரு உறுப்பினரும் செல்வதற்கு சிந்திப்பதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.