Header Ads



4 நாடுகள் இலங்கைக்கு அவசர உதவி - இந்தியாவிலிருந்து 80 தொன் உதவிப்பொருட்கள்..!


நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு உடனடி மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா,   பாகிஸ்தான், சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளன. 
ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது நிவாரணப் பொருட்களை கப்பல்கள் மற்றும் விமானங்கள்  ஊடாக இன்று நாட்டுக்கு அப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்கா 50ஆயிரம் டொலர் நிதியை வழங்குதற்கு முன்வந்துள்ளது.  
அதேநேரம் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளன.

இலங்கையில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு அனுப்பிய 80 டன் நிவாரணப் பொருட்கள் இலங்கை சென்றடைந்தன.


3 comments:

  1. I hope all the aid will go to the people who suffered in the current calamity. And we pray for it.

    ReplyDelete
  2. It should not be like tsunami aid.

    ReplyDelete
  3. Please don't take any body this is for the who suffering from the floods and land slide.

    ReplyDelete

Powered by Blogger.