Header Ads



இஸ்லாமியரான லண்டன் மேயர் குறித்து, டொனால்ட் டிரம்ப் என்ன நினைக்கிறார்..?


பிரித்தானிய தலைநகரான லண்டனிற்கு புதிய மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள இஸ்லாமியரான சாதிக் கான் அமெரிக்கா நாட்டிற்குள் நுழைய முடியுமா என்ற கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இஸ்லாமிய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான கருத்துக்களை கொண்ட டிரம்ப், தான் ஜனாதிபதியாக தெரிவானால் இஸ்லாமியர்களை அமெரிக்க நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என ஏற்கனவே கூறியுள்ளார்.

இந்நிலையில், 3 தினங்களுக்கு முன்னர் பிரித்தானிய வரலாற்றில் முதன் முறையாக இஸ்லாமியரான சாதிக் கான் என்பவர் லண்டன் நகருக்கு மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

மேயராக தெரிவான பின்னர் ‘அமெரிக்கா நாட்டிற்கு விரைவில் பயணம் செய்து அங்குள்ள மேயர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவானால் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகள் சாதிக் கானை அமெரிக்க நாட்டிற்குள் அனுமதிக்குமா என்ற கேள்விகள் எழும்பியுள்ளன.

இந்நிலையில், இந்த கேள்விகளுக்கு டொனால்ட் டிரம்ப் நேற்று பதிலளித்துள்ளார்.

அப்போது, ‘லண்டன் நகர் மேயராக ஒரு இஸ்லாமியர் தெரியாகியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. சாதிக் கான் நேர்மையாக செயல்பட்டு லண்டன் நகரை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால், எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வகையில் இஸ்லாமியரான சாதிக் கான் அமெரிக்கா நாட்டிற்குள் நுழைவதில் தனக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.