"ஹக்கீமும் ஹசன்அலியும் விரைவில், கூட்டறிக்கை வெளியிடவுள்ளார்கள்"
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலிக்கும் கட்சிக்கும் இடையில் பல மாதகாலமாக நிலவிய முரண்பாடுகள் உட்பட அனைத்து உள்ளக முரண்பாடுகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.
புதன்கிழமை இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலிக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளது
இச்சந்திப்பு இருவருக்குமிடையில் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்த்து வைப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்ஸாக்கின் இல்லத்தில் கொழும்பில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்ஸாக் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், எல்லாப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளது.
அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன. தலைவர் ரவூப் ஹக்கீமும் செயலாளர் நாயகம் ஹசன்அலியும் வெகுவிரைவில் கூட்டு அறிக்கையொன்றினை வெளியிடவுள்ளார்கள். அவ்வறிக்கையில் அனைத்து விடயங்களும் தெளிவுப்படுத்தப்படும் என்றார்.

Post a Comment