இலங்கைக்கு உதவுங்கள் - பிரதமர் நவாஸ்செரீப் உத்தரவு
இலங்கையில் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் தமது இரங்கலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் முகமாக உரிய உதவிகளை அனுப்புமாறு பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தத்தில் 200 பேர் வரை கொல்லப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
இதனையடுத்து, பாகிஸ்தான் மக்கள் தமது கவலையை இலங்கை மக்களுடன் பகிர்ந்து கொள்வதாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment