Header Ads



நவீன கற்பித்தலில் கால் பதிக்கும், யகீன் மொடல் ஸ்கூல்

கண்டி அம்பதன்ன யகீன் மொடல் ஸ்கூலில் அண்மையில் நவீன கற்பித்தல் முறைகளுள் ஒன்றான e – Teaching  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

க.பொ.த. (சாதாரண தரம்) வரை வகுப்புகளைக் கொண்டுள்ள இப்பாடசாலையில் வௌ;வேறு வகுப்புகளுக்கான பாடங்கள் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் மூலமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.

2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் ஆங்கில மொழி மூலமாக அரசாங்கப் பாடத்தி;ட்ட அடிப்படையில் கல்வி புகட்டப்படும் அதேவேளை வௌவேறு நவீன உத்திகள் இதற்காக கையாளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே இவ்வாறான ஒரு கற்பித்தல் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களது நிலை, சிந்தனை, தேவை, வசதி போன்ற பல காரணிகளை உள்வாங்கி மிக நுணுக்கமாக வௌ;வேறு பாடங்களுக்குரிய வீடியோக்களை வடிவமைக்கும் ஆய்வுகூடம் இப்பாடசாலையின் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூலில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய யகீன் மொடல் ஸ்கூல் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான கபஹ்மி கபாரூக் ,

'கல்வித்துறையில் தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடு காலத்தின் இன்றியமையாத ஒரு தேவையாக இன்று சகலராலும் உணரப்படுகின்றது. இதன் அடிப்படையில் அதற்கான தீர்வுகளை முற்கூட்டியே அடையும் நோக்குடன் இவ்வாறான ஒரு முதலீட்டை செய்வதற்காக எமது நிறுவனம் முடிவு செய்துள்ளது. காலப்போக்கில் இந்தச் சேவை பலருக்கும் கிடைக்கக் கூடியதாக விஸ்தீரணம் செய்யப்பட இருக்கிறது. தற்போதைய நிலமையில் இலங்கையில் இவ்வாறான ஒரு இலத்திரனியல் கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்திய முதலாவது பாடசாலையாக யகீன் மொடல் ஸ்கூல் திகழ்கிறது' என்றார்.

பாடசாலையின் e – Teaching பிரிவு முகாமையாளர் ருமேஷ் பெரேரா உரையாற்றும்போது 'இவ்வாறான நவீனமான ஒரு திட்டம் சவால் நிறைந்தது. எனினும் அது மிகச்சிறந்த முறையில் இப்பாடசாலையில் அமுல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2021ம் ஆண்டு எமது மாணவர்களை இலத்திரனியல் புத்தகங்கள் வரை இட்டுச்செல்லும் நோக்குடன் எமது  பிரிவு முயற்சி செய்து கொண்டிருக்கிறது' என்றார்.  

1 comment:

  1. Congratulations Yaqeen Model School! A need of the day!

    ReplyDelete

Powered by Blogger.