நசீர் அஹமடின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது - வலுக்கும் எதிர்ப்பு (வீடியோ)
கடற்படை அதிகாரியை பகிரங்கமாக திட்டியதாக கிழக்கு மாகாண அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏ. நாசீர் அஹமட் இவ்வாறு கடற்படை அதிகாரியை, அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் முன்னிலையில் இழிவுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரைமுறை தெரியாவிட்டால் இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கடற்படை அதிகாரியை முதலமைச்சர் கடுமையாக திட்டியுள்ளார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு ஒன்றில் முதலமைச்சருக்கு முதல் அமெரிக்கத் தூதுவர் மேடைக்கு அழைக்கப்பட்டமையை பகிரங்கமாக கண்டித்து இவ்வாறு திட்டியுள்ளார்.
நிகழ்வு நடைபெறும் தினத்தில் முதலமைச்சர் நாட்டில் இருக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் அழைப்பு விடுக்கப்படவில்லை என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்வில் பங்கேற்குமாறு ஆளுனரே முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுத்து மரியாதை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=6MgUrhb3XIk
https://www.youtube.com/watch?time_continue=8&v=tuAUBaCda5U

Even if the Navy officer did anything this bafoon should have reacted in a nice manner. His behaviour was appalling.
ReplyDeleteஇவர் அளவுக்கு அதிகமாக விளம்பரத்தை விரும்புவதால் வந்த வினை. இதற்கு முன்னர் கல்வி ராஜாங்க அமைச்சர் ராதா கிருஷ்ணனிடமும். இதே விளம்பர வெறிக்காக தேவையில்லாத அறிக்கை விட்டு அவமானபட்டார். அல்லாஹ் பெருமை அடிப்பவனை ஏறேட்டும் பார்க்கமாட்டான். இவர் தன் அதிகார வெறியை குறைத்துகொள்வது சமுதாயதிற்கே நல்லது
ReplyDeleteநாகரீகம் தெரியாத கிழக்கின் முதலமைச்சர்
ReplyDeleteShame! You should never come to any type of power in the future you rotten fellow.
ReplyDeleteDamn shame. Sorry about this the navy gentlemen.
You foolish naseer have brought discredit to everyone. Pls step down.
Responsible persons should act in responsible manner. This man's behavior is insult to Muslim community. There is a proper way to react to anything wrong done by officers. This shows this man is not deserve to have such a responsible post that he has.
ReplyDeleteBetter to resign the post and do public apology for that officer and the Sri Lankan Navi.
ReplyDeleteகடற்படை அதிகாரிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்று தெரியாதாற்கும் அவருக்கு தெரிந்து இருந்தால் முதலமைச்சருக்குரிய மரியாதையை கொடுத்து இருப்பார் அவருக்கு நாகரிகம் தெரியாததால் வந்த விணைதான் இது கடைசியில் முதலமைச்சரிடம் இருந்து வாங்கி கட்டி உள்ளார். சதாரண மனிதனே தனக்கு மரியாதையை எதிர்பார்கும் இவ்வுலகில் அது பொறியியலாளர் தொழில் அதிபர்,முதலமைச்சருக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும்.
ReplyDeleteஇந்த கருத்தை கொண்டு போய் கடல்ல போடுங்க...!!??
Deleteஇவர் ஒரு முஸ்லிமா...!!??
பொது இடத்தில் இவர் நடந்து கொண்ட முறை மிகவும் தவறானது. இவரால் இலங்கை முஸ்லீம்களுக்கும் இவரது கட்சிக்கும் அவமானமே...!!!
Deletei think the organization of this programe was totally wrong. This incident occurred because of not giving proper respect to Hon .Chief minister of Eastern Province. Any as muslim and hafis should not behave like this.
ReplyDeleteஇவருக்கு வக்காலத்து வாங்காதீர்கள் முஸ்லிம் என்றால் என்ன என்பதை சகல தரப்பாரும் புரிந்து கொள்ள வேண்டும் முதலமைச்சராக இருந்தாலும் அல்லாஹ்வுடைய அடிமைதான்.பெருமை அடிப்பவன் சிருமைப்படுவான்.
ReplyDelete