Header Ads



3 பேரின் ஆலோசனையின் பெயரில்தான், மஹிந்த உகண்டா சென்றார்

விமல் வீரவன்சவிற்கும், உதய கம்மன்பிலவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒருபோதும் இடமில்லை என பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட டிலான், இனவாதிகளாக செயற்படும் இவர்களால்தான் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், மகிந்தவின் ஆலோசகர்களாக கம்மன்பில, விமல் வீரவன்ச, தினேஸ்குணவர்தன ஆகியோர் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இவர்களின் ஆலோசனையின் பெயரில்தான், உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பிற்கு, மகிந்த சென்றதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

மேலும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கும் விமல் வீரவன்சவிற்கும் ஒரே மாதிரியான குற்றச்சாட்டே சுமத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் குமார் குணரட்னம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், விமல் வீரவன்ச வெளியில் சுற்றித் திரிவதாகவும் இதன் போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்வர்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் டிலான் பெரேரா நன்றி தெரிவித்தார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களும் ஏதோ ஒரு வகையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ததாகவும், இவ்வாறான ஒற்றுமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் மாத்திரமே காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டர்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் உட்பட ஊடகவியலாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தேசிய பிரச்சினைகள் இருக்கும் போது இதனை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்தி, அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவார்கள் என பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.