Header Ads



அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசாங்கம் ஒதுக்கிய நிதி போதாது - JVP

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை. அனர்த்த முகாமைத்துவத்திற்கு  2135 மில்லியன் ரூபாயும், புனரமைப்பிற்காக 799 மில்லியன் ரூபாய்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அரசாங்கம் தயார்நிலையில் இல்லாமையும், அரசாங்கத்தின் அலட்சியமுமே இன்று நாட்டில் மிகவும் மோசமான அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உடனடியாக பாதுகாப்பையும், இழப்பீடுகளையும் வழங்கவேண்டும் எனவும் குறிப்பிட்டது.

மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.