முன்னாள் புலிகளை, மீள்விசாரணைக்கு அழைப்பது தவறல்ல - ஐ.நா நிபுணர்கள்
உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் சிவில் உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் அதன்பேரில் இலங்கை உட்பட உலக நாடுகளில் சித்திரவதைகள் தொடர்கின்றமை கவலையளிப்பதாகவுள்ளது. எனவே அந்த விடயத்தில் ஐ.நா கூடிய கவனம் செலுத்துமென இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் மேலும் உறுதிப்படுத்தப்படவேண்டுமாயின் சட்ட பொறிமுறையில் மேம்பாடுகள் அவசியமென்பதை அரசாங்கம் கவத்தில் கொள்ளவேண்டுமென குறிப்பிட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை மீள்விசாரணைக்கு அழைப்பது தவறானதொரு விடயமில்லாது விட்டாலும் சிவில் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அதேநேரம் இலங்கைக்கான விஜயத்தில் முழுமையான திருப்தி கொண்டிருப்பதாக தெரிவித்தவர்கள் 2017ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது இலங்கை குறித்த மதிப்பீட்டு அறிக்கைகளை வழங்கவுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு முக்கிய பரிந்துரைகளை தயாரித்தளிக்கவுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இலங்கையின் சமகால நிலைமைகளையும் , உறுதிமொழிக்கு அமைவான முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான இரண்டு நிபுணர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருந்தனர்.
நீதிபதிகள் மற்றும் சட்டதரணிகளின் சுயாதீன தன்மை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட பிரதிநிதி மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகள் , கொடூர செயற்பாடுகள் மற்றும் பொருத்தமற்ற தண்டனைகள் தொடர்பிலான விஷேட பிரதிநிதி ஜுவான் மென்டோஸ் ஆகியோரே இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர்களாவர்.
கடந்த ஒன்பது நாட்களாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் , மனித உரிமைகள் செயற்பாட்டளர்கள், நீதி துறையை சார்ந்தவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துள்ளதோடு மேலும் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாக சந்தித்திருந்த நிலையில் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

விசாரணைக்கு அழைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அனைவரும் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பில் சகவாழ்வு வாழவேண்டும்.
ReplyDeleteDefinitely we have to watch these terrorist. .becoze they like snakes.keep venom to start again.
ReplyDeleteமீண்டும் மீண்டும் விசாரணை என்ற போர்வையில் கைதுகள் நடைபெறும்போது பல பிரச்சினைகள் உருவாக வழிவகுக்கும் காரணம் தற்போதைய அரசியல் இஸ்திரத்தன்மை மிக மோசமாகவே தென்படுகிறது.இவ்வாறான விடங்களை அரசாங்கம் மிகக்கவனமாக கையாள வேண்டியுள்ளது இதை ஒரு பேசு பொருளாக எடுத்து அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்கள் தனக்கு சாதகமாக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
ReplyDelete