"மகனது புகழைக் கட்டியெழுப்ப, அமைச்சின் சொத்துக்கள் - ஜனாதிபதி பொறுபேற்க வேண்டும்"
காதாரத் துறையை தரம் மிக்கதாக ஆக்க வேண்டுமாயின், தரம்மிக்க ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிக்க வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு இல்லையாயின் அந்தத் துறையை ஜனாதிபதி தன் பொறுப்பின் கீழ் ஏற்க வேண்டும் என, அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று -29- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அமைச்சர் மட்டுமன்றி அவரது மகனது புகழைக் கட்டியெழுப்பவும் அமைச்சின் சொத்துக்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமைச்சினை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க கூட்டங்களில் அமைச்சரது மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்வதாகவும், இவ்வாறு குடும்ப உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் வருகின்றனர் என்பது தனக்குத் தெரியவில்லை எனவும் நலிந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் 31ம் திகதி எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, வைத்தியர் சமந்த ஆனந்த குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள், சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகள் சில தவிர்த்து நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளையதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூடியதன் பின்னர் குறித்த வேலை நிறுத்தத்தை முன்நோக்கி கொண்டு செல்வது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment