Header Ads



"ரம்புட்டான்" பாதிப்பு


களனி ஆறு பெருக்கெடுத்தமையால் மல்வானை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்ப்பட்ட வௌ்ளம் காரணமாக ரம்புட்டான் பழச்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புட்டான் மரங்கள் நீரிழ் மூழ்கியமையால் காய்கள் பழுதடைந்துள்ளதாக பழச்செய்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இம்முறை சிறந்த அறுவடையை எதிர்பார்த்த போதிலும் வௌ்ளம் காரணமாக அவை அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

எனினும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ரம்புட்டான் செய்கையாளர்களுக்கான இழப்பீடை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சுப ஹீன்கெந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.