Header Ads



இஸ்லா­தையும், முஸ்­லிம்­க­ளையும் கொச்­சைப்­ப­டுத்­து­வதை அனு­ம­திக்­க­கூ­டாது - பெளசி

-விடிவெள்ளி - பரீல்-

பெளத்­தர்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல்­கொ­டுப்­ப­தாகக் கூறிக்­கொள்ளும் பொது­ப­ல­சேனா அமைப்பை  பெரும்­பான்­மை­யின பெளத்த மக்கள்  நிரா­க­ரித்­து­விட்­டார்கள்.

அதனால் நிரா­க­ரிக்­கப்­பட்ட அமைப்­பான  பொது­ப­ல­சேனா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக  முன்­வைக்கும் குற்றச்சாட்­டுக்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவை­யில்லை என தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி தெரி­வித்தார். 

பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவும் தப்லீக் ஜமா­அத்­துக்கு எதி­ரா­கவும் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே  அவர் இவ்­வாறு கூறினார். அமைச்சர் பெளசி தொடர்ந்தும் தெரி­வித்­த­தா­வது, 

பெளத்த மதம் ஏனைய மதங்­களை நிந்­தனை செய்­யக்­கூ­டாது என்றே தெரி­விக்­கி­றது. இந்­நி­லையில் பெளத்த மதத்தின் காவ­லர்கள் என்று கூறிக்­கொள்ளும் ஞான­சார போன்ற தேரர்கள் இஸ்லாம் சம­யத்­தையும் முஸ்­லிம்­க­ளையும்  கொச்­சைப்­ப­டுத்­து­வதும் குற்றம் சுமத்­து­வதும் அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டாது. 

எவ்­வ­கை­யான பொய்ப்­பி­ர­சா­ரங்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டாலும் அதனால் எத்­த­கைய பலனும் கிட்­டப்­போ­வ­தில்லை.

இலங்­கையின் அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளுக்கும் மக்கள் சேவை­க­ளுக்கும் முஸ்லிம் நாடுகள் பெரு­ம­ளவு உத­விகள்  செய்­துள்­ளன. இந்த உத­விகள் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யாக வழங்­கப்­ப­ட­வில்லை. முழு இலங்கை  மக்­க­ளுக்கும், அனைத்து இன மக்­க­ளுக்கும்  வழங்­கப்­பட்ட உத­வி­க­ளாகும். 

எந்தச் சவால்கள் முன்­வைக்­கப்­பட்­டாலும் நாட்டின் தேசிய ஒற்­று­மையைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கும், இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும் தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான அமைச்சு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். 

முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகும். அதனால் முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றார். 

1 comment:

  1. தேசிய ஒருமைப்பாட்டை குழப்புவது தேசத்துரோகக் குற்றமாக கருதப்படாதா?
    இவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?

    ReplyDelete

Powered by Blogger.