Header Ads



மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்க, 500 பேரிடமிருந்து விண்ணப்பம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்க சுமார் 500 பேருக்கு மேல் விண்ணப்பம் செய்துள்ளதாக பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹென்பிட்டி அபயாராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மஹிந்தவின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில், ராஜபக்ச பாதுகாப்பு நிதியமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நிதியத்தின் கீழ் நான்கு பேர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

மஹிந்தவிற்கு பாதுகாப்பு அளிக்க விருப்பம் தெரிவித்து 500 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.தற்போது கடமையில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் சிவில் பணிகளை மேற்கொள்வார்கள்.

எதிர்காலத்தில் இராணுவ சேவையில் ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்குவதிலிருந்து நீக்கப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கைக்கு நிகரான எண்ணிக்கையில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தில் ஊறித்திளைத்த ஆயதப்பயிற்சி பெற்றவர்களை ஒன்று சேர்த்து ஏனைய இனங்களுக்கு எதிராக திருப்பி விடுகின்ற இன அழிப்பு திட்டமொன்றின் ஆரம்பமே இது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கெதிரான நடவடிக்கை அரசாங்கத்தினால் உடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.