இஸ்லாதையும், முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவதை அனுமதிக்ககூடாது - பெளசி
-விடிவெள்ளி - பரீல்-
பெளத்தர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் பொதுபலசேனா அமைப்பை பெரும்பான்மையின பெளத்த மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.
பெளத்தர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் பொதுபலசேனா அமைப்பை பெரும்பான்மையின பெளத்த மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.
அதனால் நிராகரிக்கப்பட்ட அமைப்பான பொதுபலசேனா முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தப்லீக் ஜமாஅத்துக்கு எதிராகவும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் பெளசி தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
பெளத்த மதம் ஏனைய மதங்களை நிந்தனை செய்யக்கூடாது என்றே தெரிவிக்கிறது. இந்நிலையில் பெளத்த மதத்தின் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஞானசார போன்ற தேரர்கள் இஸ்லாம் சமயத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்துவதும் குற்றம் சுமத்துவதும் அனுமதிக்கப்படக்கூடாது.
எவ்வகையான பொய்ப்பிரசாரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டாலும் அதனால் எத்தகைய பலனும் கிட்டப்போவதில்லை.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் மக்கள் சேவைகளுக்கும் முஸ்லிம் நாடுகள் பெருமளவு உதவிகள் செய்துள்ளன. இந்த உதவிகள் இலங்கை முஸ்லிம்களுக்கென்று தனியாக வழங்கப்படவில்லை. முழு இலங்கை மக்களுக்கும், அனைத்து இன மக்களுக்கும் வழங்கப்பட்ட உதவிகளாகும்.
எந்தச் சவால்கள் முன்வைக்கப்பட்டாலும் நாட்டின் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதற்கும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சு சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.
முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகும். அதனால் முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றார்.

தேசிய ஒருமைப்பாட்டை குழப்புவது தேசத்துரோகக் குற்றமாக கருதப்படாதா?
ReplyDeleteஇவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?