பாதைகள் + பாலங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கு..!
நாட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட பாதைகள் மற்றும் பாலங்கள் தொடர்பான தகவல்களை அறிந்துக் கொள்வதற்கு புதிய தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம், 1968 என்ற இலக்கத்தின் ஊடாக அழைத்து தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்கள் போக்குவரத்துக்களை இலகுவாக்க இந்த புதிய திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பயணிக்கும் பாதைகளில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் பொதுமக்கள் குறித்த தொலைபேசி எண் ஊடாக தகவல்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment