Header Ads



கிழக்கு மாகாண முதலமைச்சரை வாழ்த்தி, அவரின் மூர்க்கததனத்தைப் போற்றுங்கள் - AL. தவம்

-A.L.Thavam-
 
கிழக்கு மாகாண முதலமைச்சரை கிழக்கு மாகாண சபையின் நிகழ்வில் தரக் குறைவாக நாடாத்த முனைந்த கடற்படை அதிகாரியை முதலமைச்சர் கடிந்து கொள்வதை எப்படிப் பிழை காண்பீர்கள். கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் கீழ் வரும் பாடசாலையில் நடந்த நிகழ்வில் கல்வியமைச்சரையும், மீள்குடியேற்ற அமைச்சராக இருக்கும் முதலமைச்சரையும், இரண்டோடும் சம்மந்தமே இல்லாத கடற்படையினர் தரக் குறைவாக நடத்த முனைந்தால், கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க சொல்கிறீர்களா?

சிவில் நிர்வாகத்திற்கும் கடற்படைக்கும் என்ன தொடர்பு? சிவில் நிர்வாகத்தை மீண்டும் ஆயுதப்படையினர் கையிலெடுக்க அனுமதிக்கச் சொல்கிறீர்களா? மீண்டும் இராணுவ ஆதிக்கத்தைக் கிழக்கில் நிலைநாட்ட முதலமைச்சரை வழிவிடச் சொல்கிறீர்களா? கிழக்கு மக்கள் இன்னும் இராணுவத்தின் அடக்கு முறைக்குள்ளிருக்க முதலமைச்சரை அனுமதிக்கச் சொல்கிறீர்களா? மகிந்தவின் காலத்து இராணுவக் கெடுபிடிகளை மீண்டும் கொண்டு வரச் சொல்கிறீர்களா?

நூற்றுக்கு நூறு வீதம் கிழக்கு மாகாண சபையின் கீழ் வரும் நிகழ்வில் கடற்படையை கலந்து கொள்ளச் சொல்லி முதலமைச்சர் அழைத்தாரா? அல்லது கல்வி அமைச்சர் அழைத்தாரா? அல்லது நாட்டில் தற்போது கடற்புலிகளின் அல்லது அந்நிய படைகளின் அச்சுறுத்தல் இருக்கிறதா? அவ்வாறான அச்சுறுத்தல் காரணமாக கடற்படைப் பாதுகாப்பைத்தான் முதலமைச்சரோ அல்லது கல்வியமைச்சரோ கோரினரா?

இப்படி எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அழைக்கப்படாத விருந்தாளியாய் கடற்படையினர் ஏன் வந்தனர்? அதைப்பற்றிக் கேள்வி எழுப்புங்கள். பெரும்பான்மை முதலமைச்சர் ஒருவரை கடற்படையினர் இவ்வாறு அதிகாரத்தைக் காட்டி அடக்க நினைப்பார்களா? அவ்வாறு அடக்கினால் அவர்கள்தான் அடங்கிப் போவார்களா? முஸ்லிம் முதலமைச்சர் என்றால் என்ன அவ்வளவு கேவலமா? தமிழ் கல்வி அமைச்சர் என்றால் எப்படி இழிந்த பிறப்பா? மொத்தத்தில் வடக்கு கிழக்கில் பிறந்த முஸ்லிமும் தமிழனும் என்ன ஆயுதப்படைகளின் அடிமையா?

நமது தலைமைகள் என்ன ஆயுதப் படைகளின் ஏவல் பிசாசுகளா? தன்மானமற்ற தரங்கெட்ட பிறப்புக்களா? நெஞ்சி நிமிர்த்தி நின்று கேள்வி கேட்ட முதலமைச்சரை வாழ்த்துங்கள். சிவில் நிர்வாகத்தில் ஆயுதப்படைகளின் தலையீட்டை எதிர்த்து நிற்கும் நமது தலைமகனுக்கு ஆசிர்வாதம் செய்யுங்கள். தமிழனும் முஸ்லிமும் தன்மானமுள்ளவன் என நிருபித்த நமது முஸ்லிம் முதலமைச்சரைப் போற்றுங்கள்.

இருந்தாலும் இறந்தாலும் ஒரு நாளாவது எதிர்த்து நின்று மரணிக்க நினைக்கும் மறவனுக்கு மாலையிடுங்கள். அடிமை விலங்கை உடைத்து நமது சுதந்திரத்துக்காக குரல் எழுப்பும் குலக்கொடியோனைப் கொஞ்சுங்கள். நமது வீரம் இன்னும் விலை போகவில்லை. நமது தலைமைகள் இன்னும் தலை தாழ்த்தவில்லை. நாம் எழுந்து நின்று கிழக்கை ஆள்வோம். குனிந்து நமது முதுகுகள் கூன் விழத் தேவையில்லை. முதலமைச்சரை வாழ்த்தி, அவரின் மூர்க்கததனத்தைப் போற்றுங்கள்.

அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும். நாம் துணை நிற்போம் இன்சாஅல்லாஹ்.

15 comments:

  1. யார் செய்தாலும் தப்பு தப்புத்தான்

    ReplyDelete
  2. Your article like a childhood. what ever happen it's should be handle professional way. behaving like in front of children and ambassador is stupid. is he scold and get anything positive to society? he gave a space to racist to talk. muslims should be sensible and not to be a emotional. we cast our vote for him to make something good for society not to show his angry face in front of public and scold to forces.

    ReplyDelete
  3. zameer மகத்தயா கடற்படை அதிகாரி முதலமைச்சரை எல்லோருக்கும் முன்பாக அசிங்கப்படுத்தியது professional way யோ?

    ReplyDelete
    Replies
    1. Nihar mahathaya, appe kader padi athihari appedi nadenthu konde sutti, cm appedi esinethu sariya? Aver ippe athe vide asinge paduraru. Naai engelaya kadikuthu enru, nange naya kadike paduthu.

      Delete
  4. Unacceptable behavior and he should apologize publicly.

    ReplyDelete
  5. These kind of followers are the main reason for their leader's behaviour infront of public.there is a way to handle if any disrespect happened to chief minister.

    ReplyDelete
  6. SRI LANKA MUSLIM COMMUNITY WISHES TO TENDER OUR APOLOGIES TO THE NAVAL OFFICER HUMILIATED AT A SCHOOL FUNCTION BY A MUSLIM POLITICIAN.
    Posted on May 25th, 2016
    By Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, Former SLFP District Organizer, Trincomalee District and Convener – The Muslim Voice.
    The behaviour of the Eastern Province Chief Minister at the Sampoor School function was arrogant and NOT called for. Moreover, as an important political representative of the district, the Chief Minister’s actions have to be condoned severely.

    The worst part is, the manner in which the Chief Minister addressed the Navy Officer who was supposed to have been the compere, calls for severe disciplinary action at the highest level.

    If President Maithripala Sirisena will fall back on this, just for the purpose to make sure that the Chief Minister has a large Muslim vote bank (which he does NOT have in Trincomalee district) in the East/Trincomalee district, then we Muslims will NOT vote for the President any more, because, the behaviour of the Chief Minister towards the Navy Captain is a DISGRACE to the Sri Lanka Muslim Community in at large and especially that of the Eastern Province.

    The Navy should also set-in-motion “civil action/legal proceedings” against the Chief Minister for disgracing and abusing a government official and that too an armed forces officer in public and claim at least Rs. 10 million in damages for his pain of mind.

    To us, the Naval Officer (Captain) is a “HERO”. Taking this opportunity, on behalf of the Sri Lankan Muslim Community, THE MUSLIM VOICE wishes to tender our sincere APOLOGIES to the Navy Officer (Captain) and the Sri Lanka Navy and are very proud of the officer’s discipline in maintaining PATIENCE and CALM throughout the episode, in front of foreign dignitaries and a large local gathering whom the Navy Officer has been making his “YEOMAN” service in Sampoor.

    Did NOT this IDIOT of a Chief Minister know, that if NOT for the great sacrifices made by the Navy and the triforces, where the hell would he have been today, just an ordinary businessman living in Borella, Colombo.

    ReplyDelete
  7. தவம் அவர்களே, ஹபீஸ் நசீர் அவர்கள் பண்பற்ற, அநாகரிகமான முறையில் அந்த இடத்தில் நடந்துள்ளார். அதில் மாற்று கருத்து கிடையாது. கடற்படை அதிகாரியும், ஆளுநரும் அரை நிர்வாணமாக நின்றார்கள் என்றால் முதல் அமைச்சர் முழு நிர்வாணமாக நின்றுள்ளார். இதற்கு போய் நீங்கள் பெரிய வீர வசனம் எழுதி ஒரு அறிக்கை..!! போதா குறைக்கு வாழ்த்து வேற கூறச்சொள்கிரீர்கள்.

    அது சரி, என்ன பெரிய வீரமும் தன்மானமும் பற்றி கதைகீரீர்களே, பள்ளிவாசல்கள் உடைக்கப்படும் போது, வேருவளை எரிந்த போது, பொதுபல சேன காட்டிய அத்தனை அராஜகங்களின் போது, எங்கே போனது உங்கள் தன் மானம், அதற்கு மேல் ஒரு படி சென்று , இவை அனைத்துக்கும் ஒத்தாசையாக இருந்த ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க வேண்டும் என்று கூறியவர்கள் ( you and Hafeez Naseer) தானே. இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம். இல்லாவிட்டால் Jaffna Muslim தணிக்கை குழு பிரசுரிக்காமல் விட்டு விடுவார்கள். அவர்களுக்கும் ஒரு அரசியல் எதிர்பார்ப்பு இருப்பது போல் தெரிகிறது. எமது ஆரோக்கியமான சில பின்னூட்டல்கல் பிரசுரிக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை இவ்விடம் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

    ReplyDelete
  8. Dear Nizam, Your response seems not balanced. While CM conduct appears unacceptable, the conduct of the officials in organizing a function involving provincial school children who come under Chief Minister, but then slight him not inviting to the stage? Will they do the same to CM in North or South?

    ReplyDelete
  9. MR. NIYAS AHMED ZAMEER, YES CM EASTERN PROVINCE MR. NAZAAR RIGHT, YOU HAVE QUESTION WHAT THE SOCIETY WILL GET THE BENEFIT, THE BENEFIT IS FUTURE SUCH CIVIL FUNCTIONS TO BE WITHOUT FORCES PARTICIPATION. NOW THEY KNEW WHAT WAS THE BUSINESS OF NAVAL OFFICER AT THIS CEREMONY.

    ReplyDelete
  10. Naseer Ahmed nothing did any new, Vimal veeravansa, Mervin silva and BBS did these kind of act in many occasion but no one criticise those buggers or community which they belongs but why everyone including among Muslims thinking this is dishonour for Muslims.
    I personally agree with Mr Naseer act as chief minister he is having some rights

    ReplyDelete
  11. The chief minister behaved like a ignorent.he should be punished for this.any way governer and navy personnel playing game with the chif minister,if you see the video you can realize thet.

    ReplyDelete
  12. The chief minister behaved like a ignorent.he should be punished for this.any way governer and navy personnel playing game with the chif minister,if you see the video you can realize thet.

    ReplyDelete
  13. Mr. Noorul Aleem, Do you think, in front of scalding to naval force can make change in future to not participate forces in civil functions? i think more than better options available. As a human everyone making mistakes and asking apologize not shame to him.

    ReplyDelete
  14. Mr. Mohammed Jabir, i agreed with you, he has right. but he don't have right to behave to others like this way. also when other ministers did such a thing, they were punished in different way. Still he has space to solve this problem in good way. he can ask apologize because every human doing mistakes. and the things what happen to him, can be handle in diplomatic way. As a muslim he is our brother and that's what worrying. if the same thing happen from non muslim, i don't care.

    ReplyDelete

Powered by Blogger.